1 லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் பைக்கா! ஷோரூம்ல இப்பவே ஒரு துண்ட போட்டு வச்சிட வேண்டியதுதான்!
பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பேட்:ஆர்இ (Batt:RE), வெகு விரைவில் இந்திய மின் வாகன சந்தையில் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுமுக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அட்வென்சர் ரகத்தில் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவில் அட்வென்சர் ரக பைக் மாடல்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே நிறுவனம் புதியதொரு டூ-வீலரை அட்வென்சர் வாகனமாக தயார் செய்து வருகின்றது.

இவ்ளோ கம்மி விலையா!!
இந்த வாகனம் மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ஒரு லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் பேட்ஆர்இ நிறுவனத்தின் அட்வென்சர் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. அதேவேளையில், இன்னும் சில தகவல்கள் பேட்ஆர்இ-இன் புதிய இ-பைக் 1.10 லட்ச ரூபாய் வரையிலான விலை விற்பனைக்கு வரலாம் என தெரிவிக்கின்றன.
பண்டிகை நாளில் அறிமுகம்
ஆனால், விலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அதுகுறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருசக்கர வாகனத்தையும் அடுத்து வரும் ஏதேனும் ஓர் பண்டிகை தினத்தில் அறிமுகம் செய்ய பேட்ஆர்இ திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், வரும் தீபாவளி பண்டிகைக்குள் புதுமுக எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பேருலதான் அறிமுகமாக இருக்கு
சமீபத்தில் எச்டி ஆட்டோ உடன் நடைபெற்ற பிரத்யேக நேர்காணலின்போதே இநத் தகவலை நிறுவனத்தின் தலைவர் நிஸ்சர் சவுத்ரி உறுதிப்படுத்தினார். புதிய பைக் டூன் (BattRE Dune) எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இதுதவிர இன்னும் சில முக்கிய தகவல்களையும் விரைவில் அறிமுகமாக இருக்கும் எலெக்ட்ரிக் பைக் பற்றி அவர் தெரிவித்தார்.
130 கிமீ வரை பயணிக்கலாம்
இதுவரை எந்தவொரு நிறுவனமும் தயாரித்திராத, அது, இதுவரை விற்பனையில் இல்லாத ஓர் பைக்காகவே டூன் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். ஆகையால், புதுமுக பைக்கின் மீதான ஆர்வம் மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இ-மோட்டார்சைக்கிள் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ பயணிக்கும் திறனுடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.
மூன்று விதமான ரைடிங்கள் மோட்கள்
இந்த தகவல் இன்னும் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட உள்ளன. ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோட்களே அவை ஆகும். இந்த மோட்களில் மிக அதிக ரேஞ்ஜை தரக் கூடியதாக ஈகோ இருக்கின்றது. மிகக் மிக குறைவான ரேஞ்ஜ் தரக் கூடியது ஸ்போர்ட்ஸ் மோட் ஆகும்.
இந்த மோட் நம்மை இ-பைக்கின் முழு வேகத்தில் செல்ல அனுமதிக்கும். ஆனால், உச்சபட்ச வேகம் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. அதிக வேகம் காரணமாக அதன் ரேஞ்ஜ் திறன் கணிசமாக குறைகின்றது. 100 கிமீ தூரம் வரை மட்டுமே ஸ்போர்ட்ஸ் மோடில் பயணிக்க முடியும். முன்னதாக கூறியதைப் போலவே இந்த பைக்கை மிகவும் தனித்துவமான ஸ்டைலில் பேட்ஆர்இ உருவாக்கி இருக்கின்றது.
ரொம்பவும் முரட்டு தனமான தோற்றம்
மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தைக் கொண்டதாகவே டூன் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மிகவும் கட்டுமஸ்தான பேனல்கள் இ-பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதுவே சாலையில் வாகனம் பயணிக்கும் புதுவிதமான தோற்றத்தை அதற்கு வழங்க இருக்கின்றது. இதுதவிர, முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஒன்று டூன்-இல் வழங்கப்பட இருக்கின்றது. இந்த திரை செல்போன் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்குதல் போன்ற எக்கசக்க வசதிகளை வழங்க இருக்கின்றது.
இப்போதைக்கு ஸ்கூட்டர் மட்டுமே கிடைக்கும்
இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட வாகனமாகவே டூன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. தற்போது நிறுவனத்தின் கை வசம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே உள்ளன. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ஸ்கூட்டர் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பேட்ஆர்இ ஒன், பேட்ஆர்இ லவ் மற்றும் பேட்ஆர்இ ஸ்டோரி ஆகியவையே அவை ஆகும். இவற்றின் வரிசையிலேயே விரைவில் புது வரவாக டூன் இணைக்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








