படத்துலகூட இப்படி ஒரு பைக்க பாத்திருக்க மாட்டிங்க... நம்ம இந்தியால இத வெளியீடு செஞ்சிருக்காங்க!
பிரபல சீன நிறுவனமான பென்டா அதன் எல்எஃப்எஸ் 700 மோட்டார்சைக்கிளை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சி திருவிழா மிக கோலாகளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வரும் 18ஆம் தேதி வரை இது நடைபெற இருக்கின்றது. உபி மாநிலத்தின் நொய்டாவில் உள்ள 'இந்தியா எக்ஸ்போ மார்ட்'இல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி வாயிலாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக மற்றும் வருங்கால வாகனங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

சீனால இந்த பைக்கிற்கு நல்ல டிமாண்ட் இருக்கு
அந்தவகையில், பிரபல சீன இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பென்டா, அதன் சூப்பரான மோட்டார்சைக்கிள் ஒன்றை இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. சீன இருசக்கர வாகன சந்தையில் இந்த இருசக்கர வாகனத்திற்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வருகை எப்போது?
இத்தகைய ஓர் வாகனத்தையே நிறுவனம் இந்தியாவில் தற்போது காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஆனால், இது விற்பனைக்கு வருவது பற்றிய விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அண்மை காலங்களாக சீன நிறுவனங்கள் இந்திய இருசக்கர வாகன சந்தையில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக அவர்களின் கால் தடத்தைப் பதித்த வண்ணம் இருக்கின்றன.

நேக்கட் ரக பைக்
இந்த நிலையிலேயே இந்த புதிய சீன பிராண்டும் தன் வருகைக்கு அஸ்திவாரம் போடும் வகையில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தி இருக்கின்றது. பென்டா எல்எஃப்எல் 700 எனும் பைக் மாடலையே நிறுவனம் வாகன ஷோவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இது அதிக பவரை வெளியேற்றக் கூடிய நேக்கட் ரக பைக்காகும்.
மோட்டார் விபரம்
இந்த பைக்கில் 680 சிசி, 4 சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 16 வால்வுகள் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 75 எச்பி பவரை 11 ஆயிரம் ஆர்பிஎம்மிலும், 67 என்எம் டார்க்கை 8,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடையே 226 கிலோ ஆகும்.

பிரேக்கிங் சிஸ்டம்
இந்த பைக்கின் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக முன் பக்கத்தில் 2 டிஸ்க்குகளும், பின் பக்க வீலில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் பாதுகாப்பான நிறுத்தத்தை வழங்குவதற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, அதிக கொழு கொழு தோற்றம் கொண்ட டயர்களும் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
முன் பக்கத்தில் 120/70-17 டயரும், பின் பக்கத்தில் 180/55-17 டயரும் கொடுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, சீன நிறுவனம் இந்த பைக்கில் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் பிரீமியம் மற்றும் நவீன கால அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications








