லியோன்சினோ 800 பைக்கை அறிமுகப்படுத்திய பென்னெல்லி!

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் வரிசையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வரும் நிலையில் பெனெல்லி நிறுவனம் லியோன்சினோ 800 என்ற பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெனெல்லி நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக தங்கள் கார்களை விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் லியோன்சினோ 800 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பிரான்னி டிசைனை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தபைக்கில் எல்இடி ஹெட்லைட், மஸ்குலர் ஃப்யூயல் டேங்க், எக்ஸ்போஸ்டு சேஸிஸ், என இந்த பைக்கிற்கு ஷங்கியான லுக் கிடைத்துள்ளது.

லியோன்சினோ 800 பைக்கை அறிமுகப்படுத்திய பென்னெல்லி!

இந்த லியோன்சினோ பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 754 சிசி லிக்யூடு கூல்டு ட்வின் சிலிண்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 75 பிஎச்பி பவர் மற்றும் 64 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு டிரெல்லீஸ் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது.

லியோன்சினோ 800 பைக்கை அறிமுகப்படுத்திய பென்னெல்லி!

இந்த லியான்சினோ பைக்கின் அம்சங்களை பொருத்தவரை முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், கியர் போஷிசன் இன்டிகேட்டர், உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது. மேலுஞம் இந்த பைக்கில் முன்பக்கம் யூஎஸ்டி ஃபிரண்ட் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கம் மேனா ஷாக் அப்சர்பவர்கள் இடம் பெற்றுள்ளது.

லியோன்சினோ 800 பைக்கை அறிமுகப்படுத்திய பென்னெல்லி!

பிரேக்குகளை பொருத்தவரை 320 மிமீ முன்பக்க டூயல் டிஸ்க் மற்றும் பின்பக்கம் 260 மிமீ சிங்கிள் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரேக் ஏபிஎஸ் வசதியுடன் இருகு்கிறது. வீல்களை பொருத்தவரை 120/70 அலாய் வீல் முன்பக்கமும், 180/55 பின்பக்க அலாய் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் லியோசினோ 500 பைக்கை மட்டும் தான் விற்பனை செய்து வருகிறது. தற்போது 800 பைக்கை அறிமுகப்படுத்தியும். இந்த லியோசினோ 800 பைக் 500 பைக்கை விட சற்று விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2023, 21:01 [IST]
English summary
Benelli showcased leoncino 800 bike in auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+