இவ்ளோ கம்மி விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!.. இந்தியர்களை திக்குமுக்காட வச்சுட்டாங்க! ஓலாக்கு சங்கு கன்ஃபார்ம்

இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிகாஸ் (BGauss), தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அது என்ன மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது? அதன் விலை என்ன? சிறப்பு வசதிகள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மிகவும் பிரபலமான மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பிகாஸ் (BGauss)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே தற்போது இந்தியாவில் புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. சி12ஐ எனும் ஸ்கூட்டர் ரக மின்சார இருசக்கர வாகனத்தையே நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Bgauss c12i

இது இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இஎக்ஸ் மற்றும் மேக்ஸ் ஆகியைவையே அவை ஆகும். இஎக்ஸ் தேர்வே ஆரம்ப நிலை ஆப்ஷன் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 99,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது அறிமுக சலுகை விலை மட்டுமே ஆகும்.

ஆமாங்க, வெகு விரைவிலேயே இதன் விலைகள் உயர இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் வரும் 19ஆம் தேதி முதல் அறிமுக விலையில் இருந்து கணிசமான ரூபாய்கள் உயர்த்தப்பட்டு புதிய விலையில் பிகாஸ் சி12ஐ இஎக்ஸ் விற்பனைச் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தேர்வைவிட சற்று காஸ்ட்லியானதாக மேக்ஸ் இருக்கின்றது.

இதற்கு 1 லட்சத்து 26 ஆயிரத்து 153 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிகாஸ் நிறுவனம் சக்கன் பிளானட்டிலேயை வைத்து வடிவமைத்து, தயாரித்திருக்கின்றது. இந்த அதிக விலைக்கு அதில் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

பிகாஸ் நிறுவனம் சி12ஐ இஎக்ஸ் தேர்வை குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக அதில் 2.0 kWh பேட்டரி பேக்கையே பயன்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், சி12ஐ மேக்ஸ் தேர்வில் 3.2 kWh இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால்135 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

ஆனால், சி12ஐ இஎக்ஸ் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 85 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும். அராய் வழங்கிய சான்றின்படி வெளியாகி இருக்கும் ரேஞ்ஜ் விபரங்களே இவை ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரேஞ்ஜ் விஷயத்தில் மட்டுமில்லைங்க சில சிறப்பம்சங்கள் விஷயத்திலும் அவை மாறுபட்டே காட்சியளிக்கின்றன.

இதனால், இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய விலை வித்தியாசம் தென்படுகின்றது. அதேவேளையில், அராய் சான்றளித்திருக்கும் ரேஞ்ஜ் திறனை நிஜ வாழ்க்கையில் பெற முடியாது. குறிப்பாக நகர்புற பயன்பாட்டில் கட்டாயம் அது சொல்லி இருப்பதைவிட குறைவான ரேஞ்ஜையே சி12ஐ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும்.

அதேவேளையில், சில யுக்திகளைக் கடைப்பிடித்தால் நிறுவனம் கூறியிருக்கும் ரேஞ்ஜ் திறனை சுலபமாக பெற முடியும். அதாவது, குறைவான வேகத்தில் வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தேவையில்லாமல் மின் விளக்கு மற்றும் ஹாரன் போன்ற மின்சாதன பொருட்களை பயன்படத்தாமல் தவிர்த்தால் நல்ல அளவிலான ரேஞ்ஜ் திறனை பெற்றுக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான 450எஸ் (Ather 450 S)-ஐயும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ஏர் (Ola S1 Air) மற்றும் எஸ்1 எக்ஸ் (Ola S1 X) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கின. இவற்றிற்கு போட்டியாகவே தற்போது பிகாஸ் நிறுவனம் புதிய இ-ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 0:07 [IST]
English summary
Bgauss c12i electric scooter launched in india at inr 99999
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+