இதுவே இத நம்ம டிடிஎஃப் செஞ்சிருந்தா வச்சு செஞ்சிருந்திருப்பாங்க... பார்வையாளர்களை முகம் சுழிக்க செய்த ரச்சிதா!

மாஸ் காட்டுறதா நெனச்சுட்டு நம்மல்ல பல பேரு நமக்கே தெரியாம சில வேண்டாத செயல்களை செய்து வருகின்றோம். குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களைக் கெத்து என கருதிக் கொண்டு போற போக்கில் அசால்டாக செய்து விட்டு வம்பில் சிக்கிக் கொள்கிறபவர்கள் இங்கு பலர் இருக்கின்றனர்.

இதுமாதிரியான சர்ச்சையில் அடிக்கடி சிக்கும் நபரே டிடிஎஃப் வாசன். பைக் ஸ்டண்ட் செய்வதற்கு பெயர் போனவராக இவர் கருதப்படுகின்றார். ஆகையால், இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில் நம்பர் பிளேட் இல்லாத காரை பயன்படுத்திய விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. காரை அவர் வந்த தியேட்டர் வாசலிலேயே வைத்து பறிமுதல் செய்த காவல்துறையினர், அதற்கான மேற்படி நடவடிக்கைகளையும் டிடிஎஃப் வாசன்மீது மேற்கொண்டனர்.

ரச்சிதா

சாகச ரைடு

இவர் ஆரம்பத்தில் இருசக்கர வாகனத்தை அதிக வேகத்தில் இயக்கியது, கைகளை விட்டு சாகச ரைடுகளை மேற்கொண்டது போன்ற சர்ச்சையான செயல்களுக்காக போலீஸாரின் நடவடிக்கை ஆளாகினார். இந்த மாதிரியான ஓர் நபருக்கே டஃப் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் புகழ் ரச்சிதா மகாலட்சுமி ஓர் சர்ச்சையான சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றார். சமீபத்தில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் ரைடு செய்வது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.

சர்ச்சை வீடியோ

இந்த வீடியோவே அவர்மீதான சர்ச்சை வெடிக்க காரணமாக அமைந்து இருக்கின்றது. ஹெல்மெட் உள்ளிட்ட ரைடிங் கியர் அனைத்தையும் அவர் பயன்படுத்தி இருந்தார். இருப்பினும், குறிப்பிட்ட ஓர் இடத்தில் அவர் இரு கைகளையும் விட்டுவிட்டு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை இயக்கினார். இதுவே அவர் மீதான சர்ச்சைக்குக் காரணமாக அமைந்து இருக்கின்றது. பொதுவெளியில் இதுபோன்று ஸ்டண்ட் மேற்கொள்வது குற்றச் செயலாகும்.

ரச்சிதா

வைரல் வீடியோ அடிப்படையில் நடவடிக்கை

எனவேதான் கடந்த காலங்களில் வைரல் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு பல சாகச ரைடர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இந்த செயல், சாகசத்தை அரங்கேற்றுபவருக்கு மட்டுமின்றி பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த காரணத்திற்காகவே கடந்த காலங்களில் டிடிஎஃப் வாசன் உள்ளிட்ட பலர்மீது காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. இதுமாதிரியான ஓர் நடவடிக்கை பிக்பாஸ் புகழ் ரச்சிதா மீது காவல்துறை எடுத்ததாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

கூடிய விரைவில் நடவடிக்கை பாயலாம்

அதேவேளையில், கூடிய விரைவில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரச்சிதாவிற்கு ரசிக பட்டாளம் சற்று விரிந்துக் காணப்படுகின்றது. அவர்களையும் ரச்சிதாவின் இந்த செயல் செய்ய தூண்ட செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, போலீஸோரின் நடவடிக்கை பற்றிய தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம். பலரின் ரச்சிதாவின் இந்த செயலுக்கு வரவேற்பும், ஒருசிலர் அவருக்கு எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

ரச்சிதா

ரீ-போஸ்ட் செய்த ரச்சிதா

அதேவேளையில், ரச்சிதாவின் இந்த வீடியோ சற்று பழையது என்பது நாம் இங்கு கவனிக்கத்தகுந்தது. அவர் இதனை ரீ-போஸ்ட்டே செய்திருக்கின்றார். ஆனால் அதுவே அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், நடிகை பயன்படுத்தி இருக்கும் பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான மீட்டியோர் ஆகும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரச்சிதா

பைக்கின் சிறப்பம்சங்கள்

இதில், அவர் பயன்படுத்தி இருப்பது 349 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடனே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தரமான இருசக்கர வாகனத்திலேயே கையை விட்டு கெத்தாக வலம் வந்திருக்கின்றார், ரச்சிதா.

ட்ரிப்பர் நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு, ப்யூவல் கேஜ் என எக்கசக்க அம்சங்களை இந்த பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது. இந்த டூ-வீலர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 37 கிமீ வரை ரியல் உலகில் மைலேஜ் தரும். இந்திய இளைஞர்களுக்கு இந்த வாகனத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே நிறுவனம் தற்போது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 20:11 [IST]
English summary
Bigg boss fame rachitha mahalakshmi stunts royal enfield
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X