ஐபிஎல் போல நடக்கப்போகும் பைக் ரேஸ் பற்றி தெரியுமா? முழு விபர வீடியோ!
இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸ் லீக் போட்டியில் 8 டீம்களில் ஒரு டீமாக பிக்ராக் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. ஐபிஎல் போட்டி போல நடக்க போகும் பைக் ரேஸ் போட்டியில் பிக்ராக் நிறுவனம் தனக்கான அணியை தயார் செய்து போட்டியில் பங்கேற்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அந்நிறுவனம் தனது பைக்குகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் சூப்பர் கிராஸ் பேஸ்லி போட்டியில் பிட் லாக் நிறுவனம் பங்கேற்பதற்காக ஜப்பானிலிருந்து மோட்டார் பைக்குகளை இந்தியாவில் இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் இந்நிறுவனம் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விவரங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளோம் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் என்பது இந்தியாவில் நடக்க உள்ள மிகப்பெரிய பைக் ரேஸ் பந்தயமாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் எப்படி அணி அணியாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்பட்டு போட்டி நடக்கிறதோ அதேபோல இந்த போட்டியும் அணி அணியாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்பட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டியில் பிக்ராக் நிறுவனம் தனக்கென ஒரு அணியை அறிமுகப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 8 டீம்களுடன் இந்த போட்டி நடைபெற உள்ளது நான்கு பிரிவுகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பைக்கை தான் பிக்ராக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டி என்று நடைபெறுகிறது எங்கு நடைபெறுகிறது என்ற விபரம் எல்லாம் விரைவில் தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








