இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் போட்டியில் இணைந்த பிக்ராக்! ஐபிஎல் மாதிரி நடக்கப்போகும் பைக் ரேஸ்!
மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் இன்று ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிக்ராக் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் நடக்கவுள்ள சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
பிக்ராக் என்ற நிறுவனம் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனமாகவும் இந்நிறுவனம் இதுவரை 6 ஆயிரம் பைக் ரைடர்களை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிள்களுக்கான சிறந்த டிரைனிங் சென்டராக விளங்குகிறது. இந்நிறுவனத்திற்கு சுமார் 50 ஆண்டு கால மோட்டார் ஸ்போர்ட்ஸ் அனுபவம் இருப்பதாக கூறுகிறது.

இந்நிறுவனத்திடம் சர்வதேச தரமான ரேஸர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக்கில் பங்கேற்க போவதாக முடிவு செய்துள்ளது. இந்த போட்டியில் ஒரு டீமை இந்நிறுவனம் வாங்குகிறது. இந்த நிறுவனத்தை இந்தியாவில் சூப்பர் கிராஸ் மற்றும் ராலி ரைடு சாம்பியனான சிஎஸ் சந்தோஷ் என்பவர் நடத்தி வருகிறார். இவருடன் கௌதம் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் நடத்தி வரும் சிஎஸ் சந்தோஷ் இந்தியாவின் பேக்கர் பயோனிர் என அழைக்கப்படுபவர். இவர் ரேஸர்களுக்கு மென்டராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் உள்ள இளம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை தேர்வு செய்து இந்த போட்டியில் பங்கேற்க வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரேஸ் போட்டி பரபரப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஸர்கள் மட்டுமல்ல அதே நேரம் ரேஸ் குறித்து திட்டமிடுபவர்கள், மார்க்கெட்டிங் நபர்கள், ரேஸ் குறித்த பிசினஸை நடத்தும் நபர்கள், ஊடகத்தினர் மற்றும் பிராண்டை மேம்படுத்தும் நபர்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட நபர்கள் இருக்கின்றனர். இவர்களிடம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்த தீவிரமான புரிதல் இருக்கிறது. இதை வைத்து அவர்கள் சாம்பியன்ஷிப் கண்டெண்டர்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிறுவனத்தை நடத்தி வரும் கௌதம் ஒரு விளையாட்டு துறை ஆர்வலராக இருக்கிறார். இவர் வீரா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார். மேலும் இவர் புரோ கபடி லீக் மற்றும் புரோ பஞ்சா லீக் ஆகியவற்றில் பிரான்ஸிசியை நடத்தி வருகிறார். இவருக்கு விளையாட்டு துறையில் அதிகமான அனுபவம் உள்ளது.

மற்றொரு பங்குதாரரான உதய் சங்கர் ஒரு பைக் ரேஸ்ராக இருப்பவர். இந்த பிக்ராக் நிறுவனத்திற்கு பெரு நிறுவனமாக இருப்பது பிக்ராக் டிரிட் பார்க் என்ற நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இந்தியாவில் சிறப்பான ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிள் டிரைனிங் சென்டரானா பிக்ராக் நிறுவனத்தை நடத்தி வருகிறது.
இந்த இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸ் லீக் போட்டியில் இதுவரை பன்சில், எஸ்ஜி ஸ்பீடு ராக் பிரேசர்ஸ், குஜராத் டிரையல்பிளாஷர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. தற்போது புதிதாக நிறுவனமும் இதில் சேர்ந்து உள்ளது இந்தப் போட்டியை சியட் நிறுவனம் ஸ்பான்சர் செய்து நடத்துகிறது. போட்டி டெல்லி அமதாபாத் புனே ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரேஸ் நடப்பதற்கான தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த போட்டியில் மொத்தம் 8 டீம் பங்கேற்க உள்ளன. அந்த 8 டீமும் 3 ரவுண்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும். போட்டிகள் நான்கு விதமான கேட்டகிரியாக பிரிக்கப்பட்டுள்ளன. 450 சிசி சர்வதேச போட்டி, 250சிசி சர்வதேச போட்டி, 250சிசி இந்தியா ஆசியா கலப்பு பிரிவு, 85 சிசி ஜூனியர் பிரிவு ஆகிய பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
கிட்டத்தட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல இதில் பங்கேற்கும் வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். இதில் எடுக்கப்படும் வீரர்களே இறுதியாக ரைட் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தற்போது ரைடர்களை பதிவு செய்யும் காலம் கொடுக்கப்பட்டு அதில் ஏராளமான ரைடர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். 8 டீம்களும் ரெடியான உடன் ஏலம் நடைபெறும். ஏலம் நடக்கும்போது டைடர்கள் பிரிக்கப்படுவார்கள். அதன் பின்பு தான் போட்டி குறித்து அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியட் இந்தியன் சூப்பர் கிராஸ் ரேஸிங் லீக் போட்டியை பொறுத்தவரை இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ரேஸ் குறித்த விழிப்புணர்வையும் அதே நேரத்தில் ஆர்வமுடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக இந்த போட்டி திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரேஸிங் ரசிகர்கள் இதன் மூலம் அதிகமாக வாய்ப்புகளை பெறவுள்ளனர்.


Click it and Unblock the Notifications









