பைக்கின் என்ஜினை சர்வீஸ் செய்வதில் இந்த ரெண்டே விஷயம்தான் இருக்கு!! இந்த சர்வீஸ் செண்டருக்கு வாங்க!

எஸ்.கே மோட்டார்சைக்கிளிஸ்ட் (SK Motorcyclist) என்ற பெயரில் பெங்களூரில் இயங்கும் சூப்பர்பைக் சர்வீஸ் மையத்திற்கு சமீபத்தில் சென்று இருந்தோம். இது ஒரு பைக் சர்வீஸ் மையம் தான். ஆனால், முழுக்க முழுக்க விலையுயர்ந்த சூப்பர்பைக்குகளை மட்டுமே சர்வீஸ் செய்யும் மையம் ஆகும்.

நாங்கள் சென்ற சமயத்தில், எஸ்.கே மோட்டார்சைக்கிளிஸ்ட் மையத்தில், ஹார்லி-டேவிட்சன், யமஹா ஆர்15 உள்பட சில சூப்பர் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த மையத்திற்கு கர்நாடகாவில் இருந்து மட்டுமின்றி, நம் தமிழ்நாட்டில் இருந்தும் சூப்பர்பைக் உரிமையாளர்கள் வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

சூப்பர் பைக்குகளை வைத்திருப்போர் ஷோரூமில் சர்வீஸ் விட விரும்பவில்லை என்றால், எஸ்.கே மோட்டார்சைக்கிளிஸ்ட் செண்டரை அணுகலாம். மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், பைக்கின் என்ஜினை எவ்வாறு பராமரிப்பது என்பதை விரிவாக காணலாம். பொதுவாகவே, ஒரு பைக் என்ஜினுக்கு ஷெல் ஆயுட்காலம், சர்வீஸ் ஆயுட்காலம் என இரண்டு உள்ளன.

bike engine oil maintains tips

ஷெல் ஆயுட்காலம் என்பது என்ஜினின் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயிலின் ஆயுட்காலம் ஆகும். என்ஜின் ஆயிலை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மாற்றிவிடுவது நல்லது. தற்போதைய என்ஜின் சிஸ்டத்தில் மாடர்ன் தொழிற்நுட்பங்கள் இடம்பெறுவதால், ஆயில் இண்டர்வெல் உதாரணத்திற்கு 10 ஆயிரம் கிமீ என கூறினாலும், 8 ஆயிரம் கிமீ-க்குள் ஆயிலை மாற்றிவிட வேண்டும். சர்வீஸ் ஆயுட்காலம் என்பது என்ஜினின் இயந்திர பாகங்களின் தரத்தை பொறுத்தது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 21:04 [IST]
English summary
Bike engine oil maintains tips from sk motorcyclist detailed video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+