முன் வீல் மட்டுமல்ல இனி பைக்கில் பின் வீலையும் சேர்த்து திருப்பலாம். பிஎம்டபிள்யூ கண்டுபிடித்த புதிய டெக்னாலஜி
பிஎம்டபிள்யூ மோட்டார் நிறுவனம் மோட்டார் சைக்கிள்களில் பின்வீலையும் சேர்த்து திருப்பும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் குறுகலான சாலைகளிலும் பைக்கை எளிதாக திருப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின் வீலையும் சேர்த்து திருப்பும் தொழில்நுட்பம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவு தான் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் ரியர் வீல் ஸ்டீரிங் டெக்னாலஜி என்ற புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை கோரி உள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் ரியர் வீல் ஸ்டேரிங் தொழில்நுட்பத்தில் செயின் டிரைவன், பெல்ட் டிரைவன் மற்றும் சாப்ட் டிரைவன் ஆகிய லேஅவுட்களை தயார் செய்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் குறித்து வெளியான ஸ்கெட்ச்களின் படி, முன்வீலை வலது பக்கம் திருப்பினால் பின் வீல் நேர்மாறாக இடது பக்கம் திரும்பும் படியும் முன்வீலை இடது பக்கம் திருப்பினால் பின் வீல் வலது பக்கம் திருப்பும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் திரும்பும் போது வாகனம் வேகமாக அதன் பொசிஷனை மாற்றும். இடைஞ்சல்கள் ஆன தெருக்களில் கூட வாகனத்தை எளிதாக திருப்ப முடியும்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது நீளமான வீல் பேஸ் கொண்ட வாகனங்கள். அதாவது க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பொருத்த முடியும். பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆர் 18 க்ரூஸர் ரேஞ்ச் பைக்கில் நீளமான வீல் பேஸ் இருக்கிறது. இதில் உள்ள டர்னிங் ரேடியஸ் பிரச்சினையை சரி செய்ய யோசிக்கும் போதே பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த ரியல் ஸ்டீயரிங் டெக்னாலஜியை உருவாக்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் போதே ஏரோ டைனமிக்ஸ் முறையில் இருக்கும்படி உருவாக்கி விட்டது. இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதன் சிக்கலான தொழில்நுட்பம் இதை தயாரிப்பதற்கான செலவு,எடை, பராமரிப்பு என்பதையும் தாண்டி இன்ஜினியரிங் விஷயத்திலேயே சில சிக்கல்கள் உள்ளன,அதே நேரத்தில் சில நன்மைகளும் இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இதை தற்போது பேப்பர் முறையில் டிசைன் செய்திருந்தாலும் நடைமுறைக்கு வரும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தற்போதைய பைக்குகளில் திருப்பங்களில் ரைடர்கள் தங்கள் உடலை அதிகம் வளைத்து திருப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது இந்த தொழில்நுட்பம் வருவதால் ரைடருக்கு சிரமம் இல்லாமல் பைக்கை திருப்பவும் உதவியாக இருக்கும்.

அதே நேரம் பழைய முன்பக்கம் மட்டும் ஸ்டேரிங் கொண்ட பைக்குகளை ஓட்டுபவர்களுக்கு இந்த ரியர் சேவிங் வீல் கொண்ட பைக் ஓட்டுவது சற்று சிரமமாக இருக்கும். இதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்க வேண்டியது இருக்கும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பல்வேறு முறைகளை கையாண்டுள்ளது அதன் ஸ்கெட்ச்களிலேயே தெரிகிறது.
முன்விழி உள்ள ஸ்டீரிங்கிற்கும் பின்வீலுக்கும் இடையே பிஸிக்கல் லிங்கேஜ்களை உருவாக்குவது மற்றும் எலக்ட்ரானிக் முறையில் இன்புட்டுகளை தருவது, ஆகிய இரண்டு தொழில்நுட்பத்தையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் டெஸ்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் எலக்ட்ரானிக் இன்புட் தரும் தொழில்நுட்பம் ஏற்கனவே கார்களில் உள்ளது அதே தொழில்நுட்பத்தை தான் பிஎம்டபிள்யூ நிறுவனம் பைக்கில் முயற்சி செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் விரைவில் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து தனது பைக்கில் இன்ஸ்டால் செய்து விடும் என எதிர்பார்க்கலாம். அப்படி செய்துவிட்டால் இது பைக் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி விடும் குறிப்பாக சிறிய ரக சிட்டி பைக்குகளில் இந்த தொழில்நுட்பம் புகுத்தப்பட்டால் மக்களுக்கு இது மிகவும் சுலபமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









