இப்படி ஒரு டூவீலர் வந்தா இந்தியர்கள் காரை தூக்கி போடவும் தயங்க மாட்டாங்க! அழகில் அசத்தும் பிஎம்டபிள்யூ இ-பைக்!
உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பிஎம்டபிள்யூ மோட்டாராட்-ம் ஒன்று ஆகும். சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் இந்த பெயரிலேயே உலக சந்தையில் தன்னுடைய பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டே முற்றிலும் தனித்துவமான தோற்றம் கொண்ட டூ-வீலரை தற்போது தயாரித்து இருக்கின்றது.
அதை வெளியீடும் செய்திருக்கின்றது. சிஇ02 எனும் பெயர் கொண்ட வாகனத்தையே நிறுவனம் வெளியீடு செய்து உள்ளது. இது ஓர் மின்சார இருசக்கர வாகனம் ஆகும். எந்த நிறுவனமும் இதுவரை தயாரித்திடாத முற்றிலும் அட்டகாசமான ஓர் இ-வாகனமாக இது தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் எளிமையான தோற்றத்தை வைத்து பார்க்கையில் நகர மற்றும் இளம் தலைமுறை பயன்பாட்டாளர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. அதேவேளையில், அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையிலும் இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பிஎம்டபிள்யூ மோட்டாராட் தயார் செய்து இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே மிகவும் குறைவான உயரம், சிறிய மற்றும் அகலமான சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சம் அதிக கிரிப்பான மற்றும் மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்க உதவியாக இருக்கும். பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த இ-வாகனத்தை செல்லமாக இ-பார்கூரர் (eParkourer) என அழைக்கின்றது.

டூ-வீலர் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு இந்த விநோத செல்ல பெயரில் நிறுவனம் அழைக்கத் தொடங்கி இருக்கின்றது. அதேவேளையில், இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தால் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்க முடியும் என தெரிகின்றது. இதை உறதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இந்த வாகனத்தில் பல மதிப்புகூட்டப்பட்ட கருவிகளை பயன்படுத்தி இருக்கின்றது.
உதாரணமாக கோல்டன் யுஎஸ்டி ஃபோர்க் இந்த டூ-வீலரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, டூ-வீலரின் எடை சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்ட அதிக எடைக் கொண்டு கூறுகள் இருசக்கர வாகனத்தின் மைய பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், இரு வீல்களிலும் டிஸ்க்குகள் சூப்பரான பிரேக்கிங் அனுபவத்தை வழங்குவதற்காக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், டூ-வீலரின் அழகிய தோற்றத்திற்காக ப்ளூ, கருப்பு மற்றும் கிரே ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, வீல் பிஎம்டபிள்யூ எனும் எழுத்துக்களும், பக்கவாட்டு பகுதியில் சிஇ02 எனும் கிராஃபிக்குகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த வாகனத்தில் ஏர்-கூல்டு சிங்க்ரோனஸ் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரையும், 54.91 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும். இந்த மோட்டாருக்கான மின்சார சக்தியை வழங்குவதற்காக 1.96 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இந்த பேட்டரி பேக்கை 1.5 kW ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 3.5 செகண்டுகளிலேயே முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளுடன் இந்த இ-டூவீலர் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனை நிறுவனம் 7,599 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 6.26 லட்சத்திற்கு விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. இதன் இந்திய வருகை பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது துளியளவும் அறியப்படாத தகவலாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு வரும் எனில் சற்று குறைவான விலையிலேயே அது விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இந்தியாவில் இ-டூவீலர் பிரிவில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. பிரீமியம் மின்சார இருசக்கர வாகனங்கள் பல சற்று குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றுடனான போட்டியை சமாளிக்க வேண்டும் எனில் அது குறைவான விலையில் வந்தால் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளில் தாக்குபிடிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









