திடீரென புக்கிங்கை நிறுத்தும் முடிவில் ஹீரோ-ஹார்லி டேவிட்சன்! இப்போதான் அறிமுகம் செஞ்சாங்க அதுக்குள்ளவா!!

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp)-ம், உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி டேவிட்சன் (Harley Davidson)-ம் இணைந்த பின்னர் ஹார்லி டேவிட்சனுக்காக தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார்சைக்கிள் மாடலே எக்ஸ்440 (X440) ஆகும்.

இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் நடைபெற்று வரும் புக்கிங் பணிகளை விரைவில் ஹார்லி டேவிட்சன் நிறுத்தப் போவதகா தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூலை 3 ஆம் தேதி உடன் புக்கிங் பணிகள் நிறுத்தப்பட உள்ளன.

Harley davidson x440 bookings

இந்த தகவல் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. எக்ஸ்440க்கு அமோகமாக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலிலேயே புக்கிங்குகள் விரைவில் நிறுத்தி வைக்கப்பட இருக்கின்றன. ஆனால், இது தற்காலிக நிறுத்தமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

எக்ஸ்440 பைக்கின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த பணிகள் அக்டோபரில் இருந்து தொடங்கப்படும் என கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக எக்ஸ்440 மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு செய்வதற்கான வாய்ப்புகளை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து இந்த பணிகள் தொடங்க இருப்பது தெரிய வந்துள்ளது.

X440 bike

இந்த நாளுக்காகவே எக்ஸ்440 பைக்கை புக் செய்தவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான உற்பத்தி ஆலையில் வைத்தே ஹார்லி டேவிட்சனின் எக்ஸ்440 மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. செப்டம்பர் மாத்திற்குள்ளாகவே உற்பத்தி பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதன் பின்னரே டெலிவரிக்கான அறிவிப்புகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்கிற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஒரு சில மாதங்களில் மீண்டும் அப்பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், லேசான விலை உயர்வுடன் அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் இணைவில் தயாரிக்கப்பட்டு இருக்கும் எக்ஸ் 440 மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டெனிம், விவிட் மற்றும் எஸ் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.

டெனிம் தேர்விற்கு ரூ. 2.29 லட்சமும், விவிட் தேர்விற்கு ரூ. 2.49 லட்ச ரூபாயும் மற்றும் எஸ் தேர்விற்கு ரூ. 2.69 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதனை புக்கிங் செய்ய ரூ. 5 ஆயிரம் இருந்தாலே போதுமானது.

இதை செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கான எக்ஸ்440 முன் பதிவு செய்யப்படும். இந்த பைக்கில் பல தரப்பட்ட சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இது 3.5 அங்குலம் கொண்ட திரை ஆகும்.

இந்த திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவும், மியூசிக்கைக் கன்ட்ரோல் செய்யவும் மற்றும் நேவிகேஷன் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். எஞ்ஜினைப் பொருத்த வரை 440 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு லாங் ஸ்ட்ரோக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டாரால் 27 பிஎச்பி பவரையும், 38 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸிலேயே இந்த மோட்டார் இயங்கும். மேலும், இந்த பைக்கில் மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் 43 மிமீ டபுள் கார்ட்ரிட்ஜ் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் வாயு நிரப்பப்பட்ட ட்வின் ஷாக் அப்சார்பர், 7 ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவை இந்தியாவின் கரடு-முரடான சாலையை சமாளிக்க ஏதுவானது ஆகும். மேலும், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டு இருக்கின்றன. முன் பக்க வீலில் 320 மிமீட்டரிலும், பின் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலிலேயே இந்த பைக்கிற்கான புக்கிங்குகள் விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஹார்லி டேவிட்சன் பைக் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், தற்காலிக நிறுத்தமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 29, 2023, 8:30 [IST]
English summary
Bookings for the x440 bike will close on august 3
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+