டாடாவோட எலெக்ட்ரிக் காருலகூட இவ்ளோ தூரம் டிராவல் பண்ண முடியாது.. ஃபுல் சார்ஜ்ல 333 கிமீ போகும் இ-ஸ்கூட்டர்!

இந்திய தயாரிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று மின்சார கார்களுக்கே டாஃப் கொடுக்கும் வகையில் அதிக ரேஞ்ஜ் தரும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது. அது என்ன ஸ்கூட்டர், அதன் விலை எவ்வளவு என்பது பற்றிய முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த காரை இரு விதமான மாடல்களாக டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகியவையே அந்த இரு மாடல்கள் ஆகும்.

பிரிஸ்க்

இதில், இவி பிரைம் ஓர் ஃபுல் சார்ஜில் 312 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடியதாக இருக்கின்றது. இந்த ரேஞ்ஜ் திறனுக்கே டஃப் கொடுக்கும் வகையிலேயே ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உள்நாட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலங்கானா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், பிரிஸ்க் இவி (Brisk EV). இதுவே டாடா நெக்ஸான் இவி பிரைமிற்கே டஃப் கொடுக்கக் கூடிய அளவிற்கு ரேஞ்ஜை தரக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்த நிறுவனம் ஆகும். ஓரிஜின் (Origin) மற்றும் ஓரிஜின் ப்ரோ (Origin Pro) எனும் இரு இ-ஸ்கூட்டர்களையே நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

பிரிஸ்க்

இவையே நெக்ஸான் இவி பிரைமை ரேஞ்ஜ் திறனில் தோற்கடிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கும் மின்சார ஸ்கூட்டர்கள் ஆகும். ஓர் முழு சார்ஜில் 333 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. ஓரிஜின் ப்ரோவே இந்த அளவு அதிக ரேஞ்ஜை தரும்.

மேலும், இந்த அளவு அதிக ரேஞ்ஜை இந்தியாவில் விற்பனையில் இருக்கும் வேறு எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் தராது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனமாக மட்டுமே தயாரிக்கப்படவில்லை, நீண்ட உழைக்கும் தன்மை, பாதுகாப்பு வசதிகள் நிறைந்த மற்றும் காசை மிச்சப்படுத்தும் திறன் உள்ளிட்ட வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும் இவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

பிரிஸ்க்

பிரிஸ்க் இவி நிறுவனம் இந்த வாகனத்தை உள்ளூர் (இந்திய) தயாரிப்பாக உருவாக்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த நிறுவனம் பெண் ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றது. ஆட்டோமொபைல்ஸ் என்றாலே ஆண் ஆதிக்கம் நிறைந்த துறை என்கிற பார்வையே பரவலாகக் காணப்படுகின்றது. இந்த நிலையை மாற்றுவதும் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.

அதிக ரேஞ்ஜ் தரும் தேர்வாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஓரிஜின் ப்ரோ-வில் இரு விதமான பேட்டரி பேக்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 4.8 kWh மற்றும் 2.1 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே ஓர் முழு சார்ஜில் 333 கிமீ ரேஞ்ஜை தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும்.

பிரிஸ்க்

அதேவேளையில், வெறும் 3.3 செகண்டுகளில் இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். 5.5 KW திறன் கொண்ட மின் மோட்டாரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தொழில்நுட்ப வசதியாக ஒயர்லெஸ் இணைப்பு வசதிக் கொண்ட தொடுதிரை, ஓடிஏ சப்போர்ட், செல்போன் ஆப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதைபோலவே கணிசமான சிறப்பு வசதிகள் கொண்டதாக ஓரிஜின் இருக்கின்றது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 175 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். அதேவேளையில், வெறும் ஐந்தே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

பிரிஸ்க்

இதற்கு அறிமுகமாக ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது. ஓரிஜின் தேர்விற்கு ரூ. 1.20 லட்சம் தொடங்கி ரூ. 1.40 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது. ஆனால், இது விற்பனைக்கு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 அக்டோபர் 28 இதன் அறிமுக நாளாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2023, 14:19 [IST]
English summary
Brisk ev unveils origin origin pro electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X