இந்தியாவில் கால்தடம் பதிக்க புதிய பெயரை தேர்வு செய்த இத்தாலி நிறுவனம்.. அழகழகான டூ-வீலர் இந்தியாவுக்கு வரபோது!
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரீமியம் இருசக்கர (Premium Electric Two Wheeler) வாகன உற்பத்தி நிறுவனம் கேக் (Cake). இந்த பிரபல நிறுவனமே இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரீமியம் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கேக் (Cake). இந்த நிறுவனம் நம் நாட்டில் கால் தடம் பதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேக் எனும் பெயரில் இல்லாமல் புதிய பெயரிலேயே நாட்டில் தன்னுடைய வருகையை அது பதிவு செய்ய இருக்கின்றது.

காலர்இவி (CollarEV) எனும் பெயரிலேயே கேக் நிறுவனம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. பிரீமியம் தர இலகு ரக எடைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக கேக் இருக்கின்றது. நிறுவனத்தின் வருகையைத் தொடர்ந்து அதன் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன.
இந்திய வருகைக்காக கேக் நிறுவனம் பெப் ஃப்யூவல்ஸ் (Pepfuels) உடன் இணைந்திருக்கின்றது. பெப் ஃப்யூவல்ஸ் ஓர் ஓஎன்ஜிசி (ONGC)-யின் நிதியின்கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். இதன் உடனே கேக் தற்போது கை கோர்த்து உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் கால் தடம் பதிப்பதற்காக கேக் பிற நிறுவனங்களுடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

அந்தவகையில், கோல்ட்வின் இன்க் எனும் ஜப்பான் நிறுவனத்துடனும், தென் கொரியாவைச் சேர்ந்த கோலோன் ஆட்டோமோட்டீவ் நிறுவனத்துடனும் அது கூட்டணியை வைத்திருக்கின்றது. இந்தியாவில் கால் தடம் பதித்திருப்பதை முன்னிட்டு அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடலான கேக் மக்கா (CAKE Makka)-வை அது களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது ஓர் இலகுவான எடைக் கொண்ட மொபட் ரக வாகனம் ஆகும். இந்த வாகனத்தையே முதல் கட்டமாக கணிசமான எண்ணிக்கையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளன. 250 யூனிட்டுகளையே அது களமிறக்க இருக்கின்றது. ஆகையால் முதலில் புக் செய்பவர்களுக்கே அந்த வாகனம் முன்னுரிமையின் அடிப்படையில் முதலில் கிடைக்கும்.

கேக் நிறுவனம் மொபட்டுகளை மட்டுமே தயாரிக்கவில்லை. அது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், நிறுவனத்தின் இ-பைக்கும் அடுத்ததாக விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின்கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட இ-வாகனங்கள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. பக் (Bukk), கல்க் (Kalk), ஓஸா (Ösa) மற்றும் மக்கா (Makka) ஆகியவற்றையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
பக் ஓர் ஆஃப்-ரோடு ரக டூ-வீலர் ஆகும். இதேபோல், கல்கும் ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட டூ-வீலரே ஆகும். ஓஸா பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்டது. மக்கா நகரங்களுக்கான தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். அனைத்தும் மிக அழகான மற்றும் கண்ணைக் கவரும் தோற்றம் கொண்டவையாகக் காட்சிளிக்கின்றன.
நடப்பாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதத்தில்) 2023 ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்றது. இந்த உலக புகழ்பெற்ற கண்காட்சியில் கலந்துக் கொண்ட கேக் நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தியது. இதைக் காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து விரைவில் இந்திய சந்தையில் தன்னுடை தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய வாக்குறுதியை கேக் நிறுவனம் நிறைவேற்றி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பெப்ஃப்யூவல்ஸ் உடன் இணைந்து கேக் நிறுவனம் நாட்டில் தன்னுடைய கால் தடத்தை பதித்து உள்ளது. அழகிய தோற்றத்திற்காகவே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









