கேக் நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் வெளியீடு! சீக்கிரமே குறைவான விலையில் வர போகுதாம்!

சுவீடனைச் சேர்ந்த கேக் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை இந்தியா ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனங்களை கூடிய விரைவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023இல் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி சில வெளிநாட்டு நிறுவனங்களும் பங்குபெற்று தங்களின் புதுமுக வாகனங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், சுவீடனைச் சேர்ந்த கேக் எனும் நிறுவனம் அதன் சூப்பரான இருசக்கர வாகன மாடல்களைக் காட்சிப்படுத்தியது. மக்கா ஃப்ளெக்ஸ், ஒஎஸ்ஏ பிளஸ் மற்றும் கல்க் ஆகிய இருசக்கர வாகனங்களையே நிறுவனம் காட்சிப்படுத்தியது.

கேக்

கல்க் :ஒர்க் இ-வாகனம்

கல்க் மின்சார இருசக்கர வாகனம் பற்றிய தகவல் பல நம்மை ஆச்சரியப்படுத்தம் வகையில் இருக்கின்றது. இது ஓர் 83 கிலோ இ-மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த வாகனத்தில் 11 கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு மின்சாரத்தை வழங்கும் விதமாக நிறுவனம் 50 ஏஎச் பேட்டரி பேக்கை பயன்படுத்தி இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 86 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதத்திற்குள் அது சார்ஜாகிவிடும். அதேவேளையில் வெறும் 2 மணி நேரங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்றிவிட முடியும். இதன் இருக்கை 926 மிமீ அளழுக் கொண்டது.

கேக்

மேலும், இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளானது ஓர் எஸ்யூவி காரை போல் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் இது சமாளித்துவிடும் என யூகிக்க முடிகின்றது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 300மிமீ ஆகும். இது ஓர் பிரீமியம் தர மின்சார வாகனம் ஆகும்.

ஓஹ்லின்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட சஸ்பென்ஷனே இந்த இருசக்கர வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக டிஸ்க்கும், இழக்கப்படும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர டிஎஃப்டி திரை போன்ற பிரீமியம் தர அம்சங்களும் இந்த இ-வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கேக்

ஓஸா பிளஸ் :ஒர்க்

இந்த மின்சார வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். இதில் அதிகபட்சம் 10 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 111 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பேட்டரி பேக்கை முழுமையாக (0-100 சதவீதம்) சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும்.

மக்கா ஃப்ளெக்ஸ் :ஒர்க்

இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 45 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். இதில் 3.3கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையக சார்ஜ் செய்ய 6 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய சூப்பரான திறன்கள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தையே கேக் நிறுவனம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது.

நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணியைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உற்பத்தி மட்டுமல்ல அவற்றை வர்த்தக பணிகளையும் நாட்டில் தொடங்கும் என கூறப்படுகின்றது. நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை உபி மாநிலத்தில் அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மேலும், தன்னுடைய மின்சார வாகனங்களைக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 14, 2023, 16:30 [IST]
English summary
Cake unveils makka flex osa plus kalk auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+