மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாட்டில் குறைய தொடங்கிருக்கா!.. ரிப்போர்ட் என்ன சொல்லுது?
இந்தியாவில் மிக சூப்பரான வளர்ச்சி பாதையை நோக்கி மின்சார இருசக்கர வாகனங்கள் பயணித்துக் கொண்டிருந்தன. இந்த மாதிரியான சூழலிலேயே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மத்திய அரசாங்கம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனையை ஊக்கிவிக்கும் விதமாக வழங்கி வந்த மானியத் தொகையைக் குறைக்கப் போவதாக அறிவித்தது.
தொடர்ந்து, கணிசமான அளவில் அது குறைக்கவும் செய்தது. அரசின் இத்தகைய நடவடிக்கை இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனை வேகத்தைக் கணிசமாக குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, மின்சார வாகனத்திற்கான தேவையை அது குறைக்கச் செய்து இருப்பதாக கூறப்படுகின்றது.

மின்சார இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரி kWh திறனை பொருத்து ஒவ்வொரு kWh -க்கும் ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டது. இந்த தொகையையே தற்போது அரசு 10 ஆயிரம் ரூபாயாக குறைத்தது. ஜூன் மாதத்தில் இருந்தே இது நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
உதாரணமாக ஓர் இருசக்கர வாகனத்தில் 3kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டிருக்கும் எனில் அந்த வாகனத்தை வாங்குபவருக்கு ஒவ்வொரு kWh-க்கும் ரூ. 15 ஆயிரம் என 3kWh பேட்டரி பேக்கிற்கு சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை ஃபேம்2 திட்டத்தின்கீழ் அரசு மானியம் வழங்கி வந்தது.
இதனை ஒரு kWh-க்கு ரூ. 10 ஆயிரம் என குறைத்ததால் முன்பு விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்ததைக் காட்டிலும் 3kWh பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை உயர நேரிட்டது. இதுதவிர இன்னும் சில காரணங்களினால் தற்போது எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விலை கணிசமாக உயர்ந்துக் காணப்படுகின்றது.
இந்த நிலையே தற்போது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை வேகத்தை குறைத்திருப்பதாக லேட்டஸ்ட் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன. கேர் ரேட்டிங்ஸே (CARE Ratings) இந்த தகவலை வெளியிட்டு இருக்கின்றது. தற்போது குறைந்து வரும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவையை மீண்டும் அதிகரிக்கச் செய்வது வாகன உற்பத்தியாளர்கள் கைகளில் மட்டுமே இருக்கின்றது.
நிறுவனங்கள் மலிவு விலையில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கினால் மட்டுமே குறையத் தொடங்கி இருக்கும் தேவை மீண்டும் வளர தொடங்கும். அதேவேளையில், இந்த பணியில் ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் களமிறங்கிவிட்டன. குறிப்பாக, ஓலா சமீபத்தில்தான் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1எக்ஸ் எனும் மாடலை விற்பனைக்குக் களமிறக்கியது.
இதன் ஆரம்ப விலை ரூ. 80 ஆயிரத்திற்கும் குறைவாகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப் போலவே சிம்பிள் ஒன் மற்றும் ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்களும் மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் இறங்கியிருக்கின்றன. ஆகையால், வெகு விரைவில் மீண்டும் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்து விற்பனையும் பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
75 சிசி தொடங்கி 110 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மற்றும் 75 சிசி தொடங்கி 125 சிசி வரையிலான திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் விற்பனையும் முந்தை நிதியாண்டுகளைக் காட்டிலும் 2023இல் கணிசமாக குறைந்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. நிதியாண்டு 19 தொடங்கி 2022 வரையில் சுமூகமான வரவேற்பு அவற்றிற்குக் கிடைத்து வந்த நிலையில் தற்போது விற்பனை வீழ்ச்சியை அவைச் சந்திக்கத் தொடங்கி இருப்பதாக கேர் ரேட்டிங்ஸ் தெரிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு நாட்டில் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் அரசால் அறிமுகம் செய்யப்பட்டதே ஃபேம் 2 திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் வழங்கி வந்த மானிய தொகையையே அரசு தற்போது குறைத்திருக்கின்றது. இதுவே, தற்போது எலெக்ட்ரிக் டூ-வீலருக்கான தேவையை நாட்டில் குறைக்கத் தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








