ஓலாவை ஓரமா ஒக்காற வைக்க வருகிறது சென்னை நிறுவனம் தயாரித்த அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!.. 4 அறிமுகமாக போகுதா

சென்னையைச் சேர்ந்த அவன்டோஸ் எனர்ஜி (Aventose Energy), எனும் புதுமுக மின் வாகன நிறுவனம் இந்தியாவில் நான்கு புத்தம் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம் நாட்டு மக்கள் மத்தியில் வெளிநாட்டு தயாரிப்புகளின் மீது மோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. வெளிநாட்டு தயாரிப்பு என்றாலே குவாலிட்டியாகவும், மிக சூப்பரானதாகவும் இருக்கும் என்கிற கண்மூடித் தனமான நம்பிக்கை நம்ம ஊரு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே, ஒரு சிலர் மிக தரமான இந்திய தயாரிப்புகள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற போதிலும் வேற்று நாட்டு தயாரிப்புகளை வாங்கிய வண்ணம் இருக்கின்றனர்.

அவன்டோஸ் எனர்ஜி

இந்த மாதிரியான சூழ்நிலையில் சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மின்சார இருசக்கர வாகனங்களை சென்னையைச் சேர்ந்த ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தயாரித்து அசத்தி இருக்கின்றது. நிறுவனம் ஒன்றல்ல, இரண்டல்ல, ஒட்டுமொத்தமாக நான்கு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அது தயாரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நான்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தன்னுடைய புதுமுக இருசக்கர வாகனங்களின் டீசர் படங்களை வெளியீடு செய்திருக்கின்றது. அவன்டோஸ் எனர்ஜி, சென்னையைச் சேர்ந்த இந்த புதுமுக மின்வாகன உற்பத்தி நிறுவனமே விரைவில் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் நான்கு எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

அவன்டோஸ் எனர்ஜி

எஸ் 110 (S110), எஸ் 125 (S125), எம்125 (M125) மற்றும் எம்150 (M150) ஆகிய மாடல்களையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதில் இரண்டு பைக் ரகத்திலும், இரண்டு ஸ்கூட்டர் ரகமாகவும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இவற்றையே அடுத்தடுத்ததாக விற்பனைக்குக் கொண்டு வர அவென்டோஸ் எனர்ஜி திட்டம் போட்டு இருக்கின்றது.

இவற்றில் எஸ்110 இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்110 மற்றும் எஸ் 110-இஆர் (S 110-ER) எனும் தேர்வுகளிலேயே கிடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அனைத்து வாகனங்களின் டீசர் படங்களையும் அவென்டோஸ் எனர்ஜி வெளியீடு செய்திருக்கின்றது.

அவன்டோஸ் எனர்ஜி

அனைத்தும் பிரீமியம் தர மின்சார டூ-வீலர்கள் ஆகும். எஸ் 110 மற்றும் எஸ் 100-இஆர் ஆகியவை மின்சார ஸ்கூட்டர் பிரிவிலும், எம் 125 மற்றும் எம் 150 ஆகியவை எலெக்ட்ரிக் பைக் பிரிவிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. மிகவும் ஸ்டைலான மற்றும் பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட இருசக்கர வாகனங்களாகவே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் மின்சார பைக்குகள் பற்றிய எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், தற்போது வெளியாகி இருக்கும் நிழற்படங்கள் வாயிலாக இரு எலெக்ட்ரிக் பைக்குகளும் சர்வதேச ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோல், இ-ஸ்கூட்டர்கள் பற்றிய முழு விபரங்களும் வெளியிடப்படவில்லை.

அவன்டோஸ் எனர்ஜி

கணிசமான தகவல்கள் மட்டுமே தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல்களின்படி ஓர் முழு சார்ஜில் 100 கி.மீட்டருக்கும்., அதிகமான தூரம் பயணிக்கும் திறனுடன் எஸ்110 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இது அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

இந்த வாகனத்தில் 140என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின்-மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இன்னும் ஏராளமான அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, செல்போன் இணைப்பு, நேவிகேஷன், திருட்டை தவிர்க்கும் அலாரம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக், ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர்-எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார டூ-வீலர்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 15:15 [IST]
English summary
Chennai firm aventose reveals electric scooters motorcycles teaser pics
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X