ரூ.27,000 பணம் மிச்சம்... சென்னை நபரின் ஆசிய கின்னஸ் சாதனை!! எலக்ட்ரிக் பைக்ஸ் இதனால்தான் பெஸ்ட்!

அல்ட்ராவொயலெட் எஃப்77 (Ultraviolette F77) எலக்ட்ரிக் பைக்கின் நம்பகத்தன்மையை வெளிக்காட்டும் விதமாக ஓர் சாதனை நிஜமாக்கப்பட்டு உள்ளது. ஆசிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த சாதனை குறித்தும், அல்ட்ராவொயலெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான அல்ட்ராவொயலெட் அதன் முதல் எலக்ட்ரிக் பைக்காக எஃப்77 -ஐ கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. எலக்ட்ரிக் பைக் என சொல்வதை விட எஃப்77 -ஐ எலக்ட்ரிக் சூப்பர் பைக் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு விலைமிக்கதாக இந்த எலக்ட்ரிக் பைக்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

man covers 6727km in f77

இருப்பினும், பல்வேறு வாடிக்கையாளர்கள் அல்ட்ராவொயலெட் எஃப்77 பைக்கிற்கு கிடைத்துள்ளனர். அந்த வரிசையில், இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக்கை வாங்கியவர் பாலா மணிக்கண்டன். இவர் தனது எஃப்77 பைக்கில் ஓர் புதிய சாதனையை செய்துள்ளார். மேலும், இவரது இந்த சாதனை இந்திய கின்னஸ் சாதனை மற்றும் ஆசிய கின்னஸ் சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.

அந்த அளவிற்கு பாலா மணிக்கண்டன் செய்தது என்னவென்றால், தனது எஃப்77 பைக்கை வெறும் 22 நாட்களில் சுமார் 6,727கிமீ தொலைவிற்கு ஓட்டி மலைக்க வைத்துள்ளார். ஏனெனில் இப்படியொரு சாதனையை ஆசியாவில் எவரொருவம் எலக்ட்ரிக் 2-வீலரில் செய்தது கிடையாது. கடந்த 2023 மே 21ஆம் தேதி சென்னையில் தனது எஃப்77 பைக்கில் பயணத்தை துவங்கிய மணிகண்டன் இந்த 6,727கிமீ தொலைவில் பல்வேறு அசாதாரண சூழல்களை சந்தித்துள்ளார்.

man covers 6727km in f77

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சுட்டெரிக்கும் 45 டிகிரி வெயிலிலும் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை ஓட்டியுள்ளார், உறைய வைக்கும் மைனஸ் 15 டிகிரி குளிர்ச்சியான சூழலிலும் பைக்கை ஓட்டியுள்ளார். பைக்கில் 55 கிலோவுக்கு பயணத்திற்கு தேவையான பொருட்களை கட்டி எடுத்துக் கொண்டு அல்ட்ராவொயலெட் எஃப்77 பைக்கில் கிட்டத்தட்ட 14 மாநிலங்களை பாலா மணிக்கண்டன் கடந்துள்ளார்.

இதில் ஆச்சிரியமளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த நீண்ட தூர பயணத்தை வெறும் 22 நாட்களில் அவர் முடித்து கொண்டது தான். மே 21ஆம் தேதி சென்னையில் துவங்கிய பாலா மண்கண்டனின் பயணம் ஜூன் 12ஆம் தேதி பெங்களூரில் நிறைவுற்றது. அல்ட்ராவொயலெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கில் கிளைட், காம்பட் மற்றும் பாலிஸ்டிக் என 3 விதமான ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன.

man covers 6727km in f77

ரைடிங் மோட்கள் என்றாலே பொதுவாக ஒவ்வொரு விதமான செயல்படுதிறனை வழங்கக்கூடியவையே. அதாவது அவற்றை ஒவ்வொரு விதமான பயண சூழலுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். ஆனால் மூன்று ரைடிங் மோட்களில் காம்பட் ரைடிங் மோடை தான் அதிகம் பயன்படுத்தியதாக பாலா மணிக்கண்டன் தெரிவித்துள்ளார்.

இவரிடம் இருப்பது சிவப்பு நிறத்திலான அல்ட்ராவொயலெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக் ஆகும். சென்னையில் துவங்கிய பயணத்தை இவர் பெங்களூரில் முடித்துக் கொண்டதன் காரணம், பெங்களூரில் தான் அல்ட்ராவொயலெட் நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. இங்கு பாலா மணிக்கண்டனின் சாதனை பயணத்தை சுட்டிக்காட்டி சில சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

man covers 6727km in f77

இதுகுறித்து அல்ட்ராவொயலெட் நிறுவனம் கூறுகையில், பாலா மணிக்கண்டன் கடந்த 6,727கிமீ தொலைவிற்கு ஒரு சூப்பர் பைக்கில் 270 லிட்டர் பெட்ரோல் தேவைப்பட்டு இருக்கலாம். இதன் மதிப்பு ரூ.27,000ஐ தாண்டி வரும். அதேபோல், 645 கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழப்பட்டு இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் எலக்ட்ரிக் பைக்கால் தவிர்க்கப்பட்டுள்ளது என்றது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த பயணத்தில் பைக்கிற்கென செலவிடப்பட்ட தொகை வெறும் ரூ.400 மட்டும் தானாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெறும் ரூ.400இல் 6,727 கிமீ தொலைவு பயணம் என்பது உண்மையில் பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஆச்சிரியம் என்று சொல்வதை விட, நம்பவே முடியவில்லை என்று கூட சொல்லலாம். ஆனால், எரிபொருள் என்ஜின் பைக்கில் இதே தொலைவை கடக்க ரூ.27,000க்கு மேல் பெட்ரோலுக்கென செலவாகி இருக்கும் என்பதை நம்ப முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 5, 2023, 23:59 [IST]
English summary
Chennai man covers 6727 km in ultraviolette f77 electric bike in 22 days
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X