சீன ஸ்கூட்டருக்கு இந்தியாவில் அனுமதி!! எல்லாம் பிளான் போட்டு தான் பண்றாங்க... அனுமதியை சும்மா கொடுக்கல!

ஜூனெங் கேப்புசினோ எல்3இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சீன எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான இதனை எந்தெந்த கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது? இந்த இ-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை நாளுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் பல்வேறு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைந்துள்ளன. இதற்கேற்ப நம் மத்திய அரசும் ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மானியங்களை வழங்கி வருகிறது. இதன் காரணமாக, சமீப காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

juneng launching cappucino in india

அதிலிலும் குறிப்பாக, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கே தற்போதைக்கு சிறப்பான தேவை உள்ளது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் இந்திய சந்தையில் களம் புகுந்துள்ளன. இந்த வகையில், அடுத்ததாக இந்தியாவில் வணிகத்தை துவங்க திட்டமிட்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஜூனெங் ஆகும்.

சீனாவின் செஜியாங் மாகாணத்தை சேர்ந்த இந்த நிறுவனம் சுருக்கமாக JNEN என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஜூனெங் நிறுவனத்தில் இருந்து விரைவில் கேப்புசினோ எல்3இ என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்வதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஜூனெங் பெற்றுள்ளது.

juneng launching cappucino in india

சீனா உள்பட வெளிநாட்டு சந்தைகளில் ஜூனெங் நிறுவனத்தின் கேப்புசினோ மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. எல்1இ மற்றும் எல்3இ என்பவை அவை ஆகும். ஆனால், நம் இந்திய அரசு இதில் எல்3இ வேரியண்ட்டுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. கேப்புசினோ எல்3இ ஆனது ஓர் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

இந்த ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.88kWh பேட்டரி தொகுப்பு (72 வோல்ட், 40 ஆம்பியர்) மற்றும் 3.5 கிலோவாட்ஸ் மோட்டார் (4.69 பிஎச்பி) வழங்கப்படுகிறது. இதே பேட்டரி & மோட்டார் உடன் தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இவற்றின் உதவியுடன் கேப்புசினோ எல்3இ ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 80kmph வேகத்தில் பயணிக்க முடியும்.

juneng launching cappucino in india

க்ளோபல் வெர்சனை காட்டிலும் இந்த ஸ்கூட்டரின் இந்திய வெர்சன் 20மிமீ குறைவான வீல்பேஸை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, ஸ்கூட்டரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 20மிமீ குறைவாக இருக்கும். இதுமட்டுமின்றி, வாகனங்களில் பயன்படுத்தப்படும் பாகங்களுக்கு நம் இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதால், சீனாவில் பயன்படுத்தப்படும் பாகங்கள் உடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது.

இதன் காரணமாக, வாகனத்திற்கு அடிப்படையான சேசிஸ் கூட மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கேப்புசினோ எல்3இ ஸ்கூட்டரின் எடை சுமார் 265கிலோ ஆக இருக்கும் என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சீனாவில், இதே எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எடை வெறும் 150 கிலோ மட்டுமே ஆகும். இவ்வாறு வாகனத்தின் எடை அதிகரிக்கப்பட்டாலும், ரேஞ்ச் எனப்படும் மைலேஜ் டபுளாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன தயாரிப்புகளுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும், மறுப்பக்கம் புது புது சீன வாகனங்கள் இந்திய மார்க்கெட்டில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. சீன பொருளாக இருப்பினும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால், ஜூனெங் கேப்புசினோ எல்3இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மத்திய அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 22, 2023, 23:45 [IST]
English summary
Chinese juneng launching cappucino electric scooter in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X