டாடா, மாருதிகூட தங்களோட காருல இப்படி ஒரு அம்சத்தை இன்னும் கொடுக்கல... கன்வெர்டபிள் காரைபோல் ஆட்டோ மாற்றம்!
இணையத்தில் ஆட்டோ ஒன்றின் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகின்றது. பெண்களுக்கு பிடித்தமான நிறமாக கருதப்படும் இளஞ் சிவப்பு (பிங்க்) நிறத்தில் அந்த ஆட்டோ காட்சியளிக்கின்றது. இது மட்டுமே ஆட்டோவின் வீடியோ வைரலாகக் காரணமில்லை, அதில் மற்றுமொரு மிக சூப்பரான அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது.
ஆட்டோவின் மேற்கூரை மோட்டார் மூலம் அகற்றப்படும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதுவே அந்த ஆட்டோவின் வைரலாக மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இணைய வாசிகள் பலரின் கவனத்தை அந்தை ஆட்டோ கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, வாகன காதலர்களின் மனதை வெகுவாக பிங்க் நிற ஆட்டோ ஈர்த்து உள்ளது.

ஆட்டோவில் வழங்கப்பட்டு இருக்கும் இந்த அம்சத்தை ஆட்டோமொபைல்துறை கன்வர்டபிள் அம்சம் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இந்த அம்சத்தை குறிப்பிட்ட சில கார்களில் மட்டுமே பார்க்க முடியும். பெரும்பாலும் சொகுசு கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இத்தகைய அம்சத்தையே தன்னுடைய வாகன மாடிஃபிகேஷன் திறனால் கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஆட்டோவில் வழங்கி இருக்கின்றார்.
இந்த அம்சம் ஆட்டோவில் எப்படி வேலை செய்கிறது என்பதையும் அவர் செய்து காட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவை இப்போது 70 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையிட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாகனங்கள் இதுபோன்று வித்தியாசமான உருவத்திற்கு மாற்றப்படுவது முதல் முறையல்ல.
கடந்த காலங்களிலும் இதுபோன்று வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களின் வாகனங்களை மாறுபட்ட தோற்றத்திற்கு மாற்றி இருக்கின்றனர். அந்தவகையில், டாடா நானோ காரை ஹெலிகாப்டரைப் போன்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் மூன்று சக்கர லோடு ஆட்டோவை அடுக்குமாடி வீடு போன்றும் மாற்றி இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய ஆட்டோவை கன்வர்டெபிள் ஆட்டோவாக மாற்றி இருக்கின்றார். இந்த நபரின் பெயர் மற்றும் பிற விபரங்கள் வெளியாகவில்லை. ஒரே ஒரு பட்டனை அழுத்திய உடன் கூரை தானாக பின் வாங்குவதை நம்மால் காண முடிகின்றது.
இதுமட்டுமில்லைங்க அந்த ஆட்டோவில் இளைஞர் இன்னும் பல சிறப்பு வேலைகளை செய்திருக்கின்றார். குறிப்பாக, இருக்கைகள் அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கின்றன. பயணிகள் இருக்கை மற்றும் ஓட்டுநர் இருக்கை என அனைத்தும் மாற்றப்பட்டு இருக்கின்றது. அதிக குஷன் வசதிக் கொண்ட இருக்கையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
வெளிப்புற நிறத்திற்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கையும் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலேயே இருக்கைக் காட்சி அளிக்கின்றது. இது ஆட்டோவிற்கு பிரீமியம் லுக்கை தரும் வகையில் இருக்கின்றது. இந்த கன்வர்டபிள் ஆட்டோவை போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவே நடமாடும் பூங்காவா ஓர் நபர் மாற்றி இருந்தார்.
வரும் கோடை வெயிலைச் சமாளிக்கும் பொருட்டு ஆட்டோவின் மேற்கூரையில் செடி-கொடிகளை நட்டு வைத்திருந்தார். இதேபோல், சென்னையைச் சேர்ந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவில் டிவி, நியூஸ் பேப்பர் போன்ற சகல வசதிகளையும் கிடைக்கும் வகையில் மாற்றி இருந்தார். இதேபோல் கார்களும் சொகுசு கப்பல்போல் மாற்றப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வதற்கு அனுமதி இல்லை. குறிப்பாக, மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை சாலையில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும் ஒரு சிலர் தங்களின் டேஸ்டிற்கு வாகனங்களை மாடிஃபை செய்து வருகின்றனர். அவை மக்களின் மனதை கவர தவருவதில்லை. அந்தவகையில், இந்த பிங்க் நிற ஆட்டோவும் பலரின் மனம் கவர் வாகனமாக மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








