நாளு சுவரே இவிங்களுக்கு தேவப்படாது போலிருக்கே... பைக்குல போகும்போதே இப்படினா! முகத்தை சுழிக்க வச்சுட்டாங்க!

இளசுகள் இரண்டு முத்த மழையைப் பொழிந்த வண்ணம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த இளம் ஜோடிகளைப் போல் மற்றவர் யாரும் இதுபோன்று செய்யக் கூடாது என்பதற்காக காவல்துறை முத்த மழையை பொழிந்துக் கொண்ட ஜோடிகள்மீது கடும் நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால், நாம் செய்யும் அந்த செயல் பிறரை எந்த வகையிலும் காயப்படுத்தவோ, புண்படுத்தவோ அல்லது பாதிக்கவோச் செய்யக் கூடாது. குறிப்பாக, முகம் சுழிக்கச் செய்யும் அளவிற்கு நம்முடைய செயல் இருக்கக் கூடாது.

Moving bike couple romance

ஆனால், இதை இன்றைய கால இளைஞர்கள் பலர் பெரிதாக பொருட்படுத்திக் கொள்வதே இல்லை. இதன் விளைவாக எதை எதை எல்லாம் பொதுவெளியில் பார்க்கக் கூடாதோ அதை எல்லாம் நாம் தற்போது பார்க்க நேரிடுகின்றது. குறிப்பாக, பொதுவெளியில் காதலர்கள் கசமுசாவில் ஈடுபடுவது பெருமளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

காலியாக ஓர் சாலையோ, பூங்காவோ இருக்கக் கூடாது, அங்கு, உடனே அவர்கள் சில்மிஷங்களைக் காண்பிக்கத் தொடங்கிடுவார்கள். ஆனால், இப்போது இந்த டிரெண்ட முற்றிலுமாக மாறிவிட்டது. தாங்கள் இருக்கும் பகுதி காலியாக இருக்கிறதா?, இல்லையா என்பதை எல்லாம் இன்றைய காதல் ஜோடிகள் கண்டுக் கொள்வதே இல்லை.

Couple romance

தாங்கள் செய்ய நினைப்பதை அப்படியே அப்பட்டமாக பொதுவெளியில் செய்துவிடுகின்றனர். அந்தவகையில், ஓர் இளம் காதல் ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே முத்தம் மழையை பொழிந்த வண்ணம் பயணித்திருக்கின்றனர். இது குறித்த வீடியோவே இணையத்தில் வெளியாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இன்றைய கால கட்டத்தில் அதிக விழிப்புடன் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களே விபத்தில் சிக்க நேரிடுகின்றனர். இந்த மாதிரியான சூழலில் இந்த காதல் ஜோடிகள் டூ-வீலரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது முத்தம் மழையைப் பொழிந்த வண்ணம் பயணித்து இருக்கின்றனர். இளசுகளின் இந்த செயல் முகம் சுழிக்க செய்யக் கூடிய செயல் மட்டுமல்ல, பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய செயலும் ஆகும்.

Couple romance moving bike

இதனால்தான் இந்த காதல் ஜோடிகள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்கின்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் கீழ் இருசக்கர வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ராஜஸ்தான் காவல்துறை தெரிவித்து இருக்கின்றது.

ஆனால், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரியவில்லை. இதுகுறித்த விபரங்கள் விரைவில் காவல்துறை தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், பாதுகாப்பற்ற நிலையில் வாகனத்தை ஓட்டியது, பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தவிர, பைக்கை ஓட்டிய நபர் மற்றம் பின்னால் அமர்ந்து சென்ற இளம் பெண் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதற்கான வழக்கு பதிவும் இருவர் மீதும் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் இளசுகள் இதுபோன்று விதிமீறல் போக்குவரத்தில் ஈடுபடுவது முதல் முறையல்ல.

ஏற்கனவே இதுமாதிரியான முகம் சுழிக்கச் செய்யக் கூடிய சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி இருக்கின்றன. இத்தகையோரின் கொட்டத்தை அடக்கும் விதமாகவே ராஜஸ்தான் காவல்துறை இளசுகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது. குறிப்பாக, அடுத்ததாக வேறு எந்த இளைஞர்களும் இதுபோன்ற விதிமீறல் செயலில் ஈடுபடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே சிறிதளவும் தயதாட்சனை இன்றி இளசுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எங்கிலும் தடையில்லை. ஆனால், அது பொதுவெளியில் குறிப்பாக, சிறுவர்கள் இருக்கும் இடத்தில் கூடாது என்பதே அறிவுறுத்தல் ஆகும். ஆனால், இதனை இன்றைய இளைஞர்கள் பொருட்படுத்தாமல் இருப்பது வேதனை உச்சம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 19, 2023, 18:49 [IST]
English summary
Couple done unwanted things while two wheeler riding
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X