பைக்கையே OYO-வா மாத்திடுவாங்க போல! இளசுகள் ரெண்டு பைக்குல செஞ்ச அட்டகாசத்த பாருங்க.. சின்ன பசங்களுக்கு நோ!
வாகனங்கள் கண்டுபிடிப்பதற்கான மிக முக்கியமான காரணம் இடம் விட்டு இடம் பெயர்வது மட்டுமே ஆகும். ஆனால், இன்றைய கால தலைமுறையினர் இந்த வாகனங்களை எதெதற்காகவே பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக, சமீப சில நாட்களாக வாகன ஸ்டண்ட் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இதுமட்டுமா வாகன ஸ்டண்டைக் காட்டிலும் மிக மோசமான மற்றும் முகம் சுழிக்கக் கூடிய நிகழ்வுகளும் வாகனங்கள் சார்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஓர் சம்பவம் பற்றிய வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இளம் ஜோடிகள் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போதே ரொமேன்ஸில் ஈடுபட்ட வீடியோவே இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது.

தலைநகர் டெல்லியிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. சமீப சில நாட்களாக வட மாநிலங்களில் இதுமாதிரியான நிகழ்வு அதிகளவில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. வட மாநிலங்களில் மட்டுமே இதுமாதிரியான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம், தமிழகத்தில்கூட இதுமாதிரியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
இந்த நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை நேரத்தில் அரங்கேறியதாக ஓர் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சினிமா படத்தையே மிஞ்சும் வகையில் இவர்களின் ரொமேன்ஸ் செயல் இருந்துள்ளது. இதனாலேயோ என்னமோ இந்த வீடியோ காட்டுத் தீயைப் போல் இணையத்தில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

மேலும், டெல்லி காவல்துறை கண்களிலும் அது பட்டிருக்கின்றது. இந்த வீடியோ பதிவை புகாராக கருத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல் புகார்களை டெல்லி போக்குவரத்து போலீஸ் சென்டினல் செயலியில் புகாரளிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியது.
டெல்லி காவல்துறை போக்குவரத்து விதிமீறல்களை களையெடுக்கும் விதமாகவே இந்த செயலியை உருவாக்கி இருக்கின்றது. பயனர்கள் யார் வேண்டுமானாலும் வாகன போக்குவரத்து விதிமீறலை இந்த செயலி வாயிலாக தெரிவிக்கலாம். ஏற்கனவே வைரல் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, நவீன போக்குவரத்து சிசிடிவி கேமிராக்களைக் கொண்டும் போக்குவரத்து விதிமீறல் வாதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே ஒவ்வொரு சிட்டிசனும் தாமாக முன் வந்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கும் விதமாக செல்போன் செயலியை காவல்துறைகள் அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன.
போக்குவரத்து விதிமீறல்களைக் குறைப்பது மட்டுமே இந்த செயலியின் நோக்கம் அல்ல. புதிய போக்குவரத்து அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வுகளும் அதன் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றது.
ரொமேன்ஸ் செய்துக் கொண்டே ஆபத்தான முறையில் பயணித்தது மட்டுமில்லாமல் அவர்கள் வேறு சில போக்குவரத்து விதிமீறல்களிலும் ஈடுபட்டு இருக்கின்றனர்.
தலைக்கவசம் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களையே அவர்கள் அசால்டாக செய்திருக்கின்றனர். இளைஞர் தலைக் கவசம் அணிந்திருக்கும் நிலையில் பெண் பயணி தலைக்கவசம் அணியாமல் பயணித்திருக்கின்றார். இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இளம் ஜோடிக்களின் இந்த செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனம் எழும்பி இருக்கின்றது. இளசுகள் செய்திருப்பதும் ஒரு வகையான வாகன ஸ்டண்டே ஆகும். இதுமாதிரியான செயல்கள் அவர்களுக்கு மட்டுமின்றி பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவேதான், இதுமாதிரியான ஸ்டண்ட் நிகழ்வுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வயதுக்கு வந்தோர் (மேஜராக இருப்பின்), யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், பொதுவெளியில் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவது என்பது அநாகரீகமானது ஆகும். குறிப்பாக, பொதுவெளியில் சிறார்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பார்கள் அவர்களை தவறான பாதையில் வழி நடத்தும். ஆகையால், இதுமாதிரியான செயல்கள் பொதுவெளியில் தவிர்ப்பதே நல்லது.


Click it and Unblock the Notifications








