ஐஐடி மாணவரால் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் டூ-வீலர்! இது விற்பனைக்கு வந்துச்சு ஓலா இருந்த தடமே தெரியாம ஆகிரும்!
இரண்டு ஐஐடி மாணவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம் கிரியேட்டரா (Creatara). இது ஓர் மின்சார வாகன (Electric Vehicle)உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே முதல் முறையாக மின்சார வாகன கான்செப்ட் மாடல்களை வெளியீடு செய்திருக்கின்றது. விஎஸ்4 (VS4) மற்றும் விஎம்4 (VM4) எனும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன கான்செப்ட் மாடல்களே வெளியீடு செய்யப்பட்டுள்ளன.
ஐஐடி டெல்லியைச் சேர்ந்தவர்கள் விகாஷ் குப்தா மற்றும் ரிங்லரேய் பமேய். இவர்களால் நிறுவப்பட்ட நிறுவனமே கிரியேட்டரா ஆகும். மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த நிறுவனங்கள் இயங்க உள்ளன. இந்த நிலையிலேயே தங்கள் நிறுவனத்தின் கை வண்ணத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு வாகனங்களை அந்த நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

ஐஐடி டெல்லியில் உள்ள ரிசர்ச் மற்றும் இன்னோவேஷன் பூங்காவில் வைத்தே இந்த வாகனங்கள் வெளியீடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் மின்சார இருசக்க வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த பிரிவை அலங்கரிக்கும் முயற்சியில் கிரியேட்டரா களமிறங்கி இருக்கின்றது.
மேலும், இப்போது கான்செப்ட் மாடல்களாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இரண்டு மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆகையால், வெகு விரைவில் அதன் உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த பணிகள் எப்பொது தொடங்கப்படும் என்கிற துள்ளிய நாள் விபரத்தை கிரியேட்டரா அறிவிக்கவில்லை.

மின்சார வாகனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் விதமாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. ரூ. 100 செலுத்தினால் மட்டுமே ஒரு லிட்டர் பெட்ரோலை பெற முடியும் என்கிற சூழல் தற்போது நாட்டில் நிலவுகின்றது.
இந்த அவல நிலையில் இருந்து நம்மை விடுவிக்கும் வகையிலேயே நாட்டில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன. இவை பயன்பாட்டிற்கு வர மேலும் சில காரணங்கள் உள்ளன. காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகன பயன்பாடு மட்டுமே ஓர் தீர்வாக உள்ளது.

இதனால்தான் மத்திய, மாநில அரசுகளும் இந்த வாகனங்களை மக்கள் மத்தியில் திணிப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளன. இதேபோல், ஹைபிரிட் வாகனங்களையும் ஊக்குவிக்கும் பணிகளும் மிக தீவிரமாகக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கிரியேட்டரா இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனங்கள் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியீடு செய்யப்படவில்லை.
விரைவில் அவை பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த வாகனங்கள் மற்ற மின்சார வாகனங்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் புதிய விஎஸ்4 மற்றும் விஎம்4 ஆகியவை பற்றிய சில முக்கிய தகவல்களை மட்டும் பகிர்ந்திருக்கின்றது.
பயணிகளை பாதுகாப்பதில் சிறந்த வாகனமாக இவை இருக்கும் என தெரிவித்து இருக்கின்றது. இதற்காக பல்வேறு முக்கிய அம்சங்களையும் அது வழங்கி இருக்கின்றது. உதாரணமாக, அதிக வெப்பத்தை உருவாக்காத பேட்டரி பேக்குகளை இதில் பயன்படுத்தி இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதேபோல், இந்தியாவின் பன்முக நிலபரப்பு தன்மைக்கு ஏற்றவாறும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், ஜிபிஎஸ் டிராக்கிங், அதிகம் ரேஞ்ஜ், அட்டகாசமான ரைடிங் அனுபவம் உள்ளிட்டவற்றையும் இது வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனங்கள் மலைப் பாங்கான பாதைகளை அசால்டாக சமாளித்துவிடும் கிரியேட்டரா தெரிவித்து இருக்கின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீட்டராக இருக்கும் என்றும், அத்துடன், வெறும் 3.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40கிமீ வேகத்தை எட்டிவிடும் திறனை அதுக் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் கூறி இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க இதை சார்ஜ் செய்ய பெரிய அளவில் நேரம் தேவைப்படாது என்றும் கிரெட்டாார கூறி இருக்கின்றது. 4-5 மணி நேரங்களிலேயே முழுமையாக சார்ஜாகிவிடும் திறனிலேயே இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என கூறப்பட்டு உள்ளது. மேலும், சிங்கிள் சார்ஜில் இந்த வாகனங்களில் 100 கிமீ வரை பயணிக்க முடியுமாம். இத்தகைய சூப்பரான தகுதிகளுடனேயே விரைவில் ஐஐடி மாணவர்களால் தயார் செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் டூவீலர்களுக்கு கிடைப்பதைப் போலவே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால், ஒரு சிலர் இப்போதும் மின்சார வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். போதிய அளவு சார்ஜிங் மையம் இல்லாததே அதற்கான முக்கிய காரணம் ஆகும். இதனை களையும் விதமான நடவடிக்கைகள் மிக தீவிரமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









