தமிழ்நாட்டுக்கு அடித்த ஜாக்பாட்... 100 கோடி ரூபா முதலீடு செய்ய பிரபல நிறுவனம் திட்டம்!

டாவோ இவி டெக் (Dao EVTech) நிறுவனம் தமிழகத்தில் 10 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய வாகனங்களுக்கான விற்பனையகங்களை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாவோ இவி டெக் (Dao EVTech), இது ஓர் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை தலைமையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அதன் தமிழகத்தில் மிகப் பெரிய முதலீட்டை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கின்றது.

டாவோ இவி டெக்

100 கோடி ரூபாய் முதலீட்டையே தமிழகத்தில் டாவோ செய்ய இருக்கின்றது. தமிழகத்தில் புதிய ஷோரூம்களை அமைக்கவே இந்த மாபெரும் முதலீடு என்பது குறிப்பிடத்தகுந்தது. நாடு முழுவதும் நிறுவனம் விற்பனையகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதே நடவடிக்கையை தமிழ்நாட்டிலும் மேற்கொள்ள டாவோ பிளான் போட்டு உள்ளது.

தற்போது நிறுவனத்திற்கு சொந்தமாக 22 விற்பனையகங்கள் மட்டுமே நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் எண்ணிக்கையையே விரைவில் உயர்த்த இருப்பதாக நிறுவனம் கூறி இருக்கின்றது. சென்னை, மதுரை, பொள்ளாச்சு மற்றும் தஞ்சை என தமிழகத்தின் முக்கிய மாவட்டங்கள் பலவற்றில் தன்னுடைய விற்பனையகங்களை திறக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

டாவோ இவி டெக்

குறிப்பாக, சென்னையில் 20 க்கும் அதிகமான ஷோரூம்களை இன்னும் ஒரு சில மாதங்களில் திறக்க இருக்கின்றது, டாவோ. இதன் வாயிலாக தமிழகத்தை மையமாகக் கொண்டு மிகப் பெரிய செயலை டாவோ இவி டெக் நாட்டில் செய்ய இருப்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

முதற்கட்டமாக முதல் நிலை நகரங்களிலும், அடுத்ததாக இரண்டாம் நிலை நகரங்களிலும், இறுதியாக டையர் 3 நகரங்களிலும் ஷோரூம்களை அமைக்க இருக்கின்றது, டாவோ. தமிழகத்தில், குறிப்பாக, சென்னையில் இருசக்கர வாகனங்களுக்கு 73 சதவீதம் தேவை இருப்பதாகவும், வருங்காலத்தில் இந்த டிமாண்ட் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் நிறுவனம் நம்புகின்றது.

டாவோ இவி டெக்

இந்த வரவேற்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே நிறுவனம் 100 கோடியை முதலீட்டில் விற்பனையகங்களை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகம் நிலவுவதாக டாவோ நிறுவனத்தின் சேர்மேனும், சிஇஓ-வுமான மைக்கேல் லியூ கூறி இருக்கின்றார்.

நிறுவனம் புதிய ஷோரூம்களை மாநிலத்தில் அமைக்க இருப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, தற்போது மிகக் குறைவான அளவிலான தேர்விலேயே எலெக்ட்ரிக் இருசக்க வாகனங்கள் தமிழகத்தில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

டாவோ இவி டெக்

டாவோ அதன் விற்பனையகங்களை திறக்கும் எனில் கூடுதல் சில தேர்வுகளை பார்த்து வாங்க தமிழக வாசிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். டாவோ நிறுவனம் ஒட்டுமொத்தமாக மூன்று எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மாடல் 703, வித்யூத் 108 மற்றும் ஜோர் 405 ஆகியவையே அவை ஆகும்.

மாடல் 703 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த இருசக்கர வாகனத்தில் 9 அங்குல எல்சிடி பிளாக்-பெர்ரி திரை, டார்க் க்னைட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 111 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும்.

இந்த சூப்பரான வேகத்தின் காரணமாக இந்தியாவின் பெஸ்ட் ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாடல் 703 காட்சியளிக்கின்றது. எல்எஃப்பி பேட்டரி, ஓபிஎம்எஸ் புரடெக்சன் போர்டு, பவரே இல்லாமல் இயங்கும் வசதி, ஒன் க்ளிக் ரிப்பேர் சிஸ்டம், தவறுதலாக கீழே விழுந்துவிட்டால் தானாக ஆஃப் செய்து கொள்ளும் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

தோற்றத்திலும் மிகவும் அழகிய வாகனமாக இது காட்சியளிக்கின்றது. க்ரூஸ் மோட், ரிவர்ஸ் ஸ்விட்ச், கார்களில் காணப்படுவதைப் போல சார்ஜிங் போர்ட் போன்றவையும் மாடல் 703 இல் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோலவே நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான வித்யூத் 108 மற்றும் ஜோர் 405 இருக்கின்றன. இதில் ஜோர் 405 டெலிவரி சேவையில் ஈடுபடுவோருக்கான வாகனம் ஆகும்.

இதில் சரக்குகளையும் ஏற்றி செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்து. ஆனால், வித்யூத் 108 ஓர் தனி நபர் பயன்பாட்டு வாகனம் ஆகும். இதற்கு ரூ. 77,582 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஓர் முழு சார்ஜில் 70கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடே மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். ஆகையால், இதை இயக்க லைசென்ஸ் மற்றும் பதிவு சான்று உள்ளிட்டவை தேவைப்படாது. மாடல் 703 இல் இடம் பெற்றிருக்கும் சில சிறப்பு வசதிகளை இதிலும் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, March 3, 2023, 17:39 [IST]
English summary
Dao tamilnadu rs 100 crore invest
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X