பெட்ரோல் பைக்குகளை தூக்கி போடுவதற்கான நேரம் வந்தாச்சு! ஃபுல் சார்ஜில் 200 கிமீ ரேஞ்ஜ் தரும்!

2023 ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி தினமான நேற்றைய நாளில் ஜோத்பூரைச் சேர்ந்த டெவோட் மோட்டார்ஸ் அதன் சூப்பரான ஓர் பைக் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த பைக்கின் தரிசனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்தது என்றே கூறலாம். இந்த இருசக்கர வாகனத்தில் ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது உண்மையிலேயே மிக சூப்பரான ரேஞ்ஜ் திறன் ஆகும்.

இதுமட்டும் இல்லைங்க இந்த வாகனம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதும்கூட. இத்தகைய சூப்பரான பைக்கையே டெவோட் மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக காட்சிப்படுத்தியது. இந்த இருசக்கர வாகனத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம் வெகு விரைவில் இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் ஆர்&டி மையம் இங்கிலாந்தில் நாட்டிலேயே அமைந்துள்ளது.

மின்சார பைக்

3 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் செய்திடலாம்

அதேவேளையில், இருசக்கர வாகனங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்தே கட்டமைக்கப்படுகின்றன. இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக டெவொட் மோட்டார்ஸ் 9.5 kW உயர் திறன் கொண்ட பேட்டரி பேக்கையே பயன்படுத்தி இருக்கின்றது. இதை வெறும் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த இருசக்கர வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் பல மடங்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரும் யூகிக்கப்படுகின்றது.

உள்ளூர் தயாரிப்பாக உருவாக்க திட்டம்

நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தியை 70 முதல் 90 சதவீதம் வரை உள்ளூர் மயமாக்க இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த யுக்தியே டெவோட்டின் மின்சார இருசக்கர வாகனத்தை விலை குறைவாக வழங்க இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க எக்கசக்கமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த பைக்கில் டெவோட் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, டிஎஃப்டி திரை, சாவியில்லாமல் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்யும் வசதி, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், இரண்டு சார்ஜிங் பாயிண்டுகள் உள்ளிட்டவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்சார பைக்

தீ விபத்து பேச்சுக்கே இடம் இருக்காது

எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி பேக் அதிக பாதுகாப்பானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. லித்தியம் எல்எஃப்பி தர பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது தீ விபத்தை தவிர்க்கும் வசதிக் கொண்டது என கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது எலெக்ட்ரிக் டூ-வீலர் பற்றிய கணிசமான தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

சீக்கிரமே இன்னும் பல விபரங்கள் வெளியாக இருக்கின்றன

வெகு விரைவில் இருசக்கர வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இ-பைக்கை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. டெவோட் நிறுவனத்தின் இந்த மின்சார பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் நிறுவனத்தின் இ-பைக் மற்றும் டார்க் நிறுவனத்தின் மின்சார பைக் ஆகிய இரண்டிற்கும் கடுமையான போட்டியாளனாக இது மாறும்.

மின்சார பைக்

போட்டி பைக் மாடல் பற்றிய விபரம்

டார்க் நிறுவனம் க்ரடோஸ் எனும் மோட்டார்சைக்கிளையே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் க்ரடோஸ் ஆர் மற்றும் க்ரடோஸ் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. முழு டிஜிட்டல் திரை, 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய நேவிகேஷன் கன்ட்ரோல் ஜாய்ஸ்டிக் போன்ற எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் க்ரடோஸ் ஆர் வேரியண்டில் சற்று கூடுதல் அம்சங்களைக் நம்மால் காண முடியும்.

குறிப்பாக ரேஞ்ஜ் மற்றும் டாப் ஸ்பீடு விஷயத்தில் இதுவே பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. க்ரடோஸ் ஆர் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதன் ஃபுல் சார்ஜ் ரேஞ்ஜ் திறன் 180 கிமீ ஆகும். ஆனால், க்ரடோஸ் வேரியண்டின் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிமீ மட்டுமே ஆகும். இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்ஜை பெற முடியும்.

பெட்ரோல் டூ-வீலருக்கும் இதன் வருகை தலை வலியை ஏற்படுத்த இருக்கு

இத்தகைய ஓர் எலெக்ட்ரிக் பைக்கிற்கே டஃப் கொடுக்கும் விதமாக டெவோட் அதன் மின்சார பைக்கை உருவாக்கி இருக்கின்றது. இந்த பைக்கின் வருகை மின்சார வாகனங்களுக்கு மட்டுமின்றி பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். குறிப்பாக, பட்ஜெட் விலை பைக் மாடல்களான ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா போன்ற கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு இதன் வருகையை போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Devot motors unveils e bike with 200 km range
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X