நமக்கு மட்டும் இல்லைங்க இந்த இளம் நடிகைக்கும் இதுதான் ரொம்ப பிடிச்ச பைக்காம்! வீட்டுக்கே வாங்கினு வந்துட்டாங்க
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக சூப்பரான பைக் மாடலாக மீட்டியோர் 350 உள்ளது. இந்த பைக்கையே பாலிவுட் தொலைக்காட்சியைச் தேர்ந்த இளம் நடிகை ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் 2021 விருதை வென்ற மோட்டார்சைக்கிளே ராயல் என்பீல்டு மீட்டியோர் 350. இந்த பைக்கை 2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி அன்றே ராயல் என்பீல்டு நிறுவனம் நாட்டில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

பெண்களின் மனம் கவர்ந்த பைக்
மேலும், நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இந்த பைக் மாடலு( மீட்டியோர் 350 )-க்கும் நாட்டில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இளம் பெண்களின் மனம் கவர்ந்த வாகனமாகவும் இது மாறி இருக்கின்றது. ராயல் என்பீல்டின் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு இளம் பெண்களும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்தவகையில், மீட்டியோர் 350யும் இளம் பெண்களைக் கவரக் கூடிய இருசக்கரக வாகனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
சொந்த பயன்பாட்டிற்காக
இதை உறுதிப்படுத்தும் விதமாக சில துடிப்பான பெண்கள் மீட்டியோர் 350-ஐ தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே பாலிவுட் தொலைக்காட்சியைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர் இப்-பைக்கை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திவ்யங்கா திரிபாதி எனும் இளம் நடிகையே ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை வாங்கியவர் ஆவார். இந்த பைக் கொள்முதல் காரணமாக இவர் தற்போது நாடு தழுவிய அளவில் பிரபலமடையத் தொடங்கி உள்ளார்.

இன்ஸ்டா வீடியோ
இதற்கு அவருடைய இன்ஸ்டா வீடியோவும் ஓர் காரணமாக உள்ளது. அவர் சமீபத்தில் ஓர் இன்ஸ்டா ரீல்ஸை வெளியிட்டார். அதில் அவரும் அவருடைய கணவரும் இணைந்து வெவ்வேறு மோட்டார்சைக்கிளை இயக்கி செல்வது போன்ற காட்சிகள் மற்றும் படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த காட்சிகள் வாயிலாகவே அவர் மீட்டியோர் 350 பைக் வாங்கி இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த பைக் ரெண்டு விதமான தேர்வில் கிடைக்கிறது
இத்துடன், தான் இந்த பைக்கை வாங்கி இருப்பதாகவும், தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பதாகவும் மற்றுமொரு பதிவையும் அவர் அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த தயாரிப்பு 1 லட்சத்து 66 ஆயிரத்து 901 ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ஆகும். மெட்ரோ மற்றும் ரெட்ரோ என இரு விதமான தேர்வுகளில் மீட்டியோர் 350 விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சிறப்பம்சங்கள் மிக தாராளம்
இது தவிர சில நவீன கால அம்சங்களும் இந்த மோட்டார்சைக்கிளில் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், நேவிகேஷன் பாட் (கூகுள் மேப் வசதியுடன்), ஸ்மார்ட்போன் இணைப்பு, அனலாக் ஸ்பீடோ மீட்டர், கியர் பொசிஷனை காண்பிக்கும் திரை போன்ற முக்கிய வசதிகளே இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பிற்காக டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
349 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்ஜினே மீட்டியோர் 350 பைக்கில் பொருத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இப்பைக் இந்தியாவில் ஜாவா பெராக், பெனெல்லி இம்பீரியல் 400 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஹையர் வெர்ஷனாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
லாங் டிரைவிற்கு ஏற்றது
சூப்பர் மீட்டியோர் 650 லாங் டிரைவ்விற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் 648 சிசி பேரல்லல் ட்வின் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 46.7 பிஎச்பி பவரையும், 52.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நவீன கால சிறப்பம்சங்களாக டிரிப்பர் நேவிகேஷன் பாட், டிஜிட்டல் டிஸ்பிளே உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட், யூஎஸ்டி ஃபோர்க் (முன் பக்கத்தில்), டூயல் ஷாக் அப்சார்பர்கள் (பின் பக்கம்), அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்கள், அலாய் வீல்கள் மற்றும் எல்இடி லைட்டுகள் ஆகியவை சூப்பர் மீட்டியோர் 650 இல் வழங்கப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications








