இந்த நடிகர் கம்மி விலைக்கு பைக்கை வாங்கி அதிக விலைக்கு விற்கிறாரா! அவரே வேணாம்னு சொன்னாலும் விடுறது இல்லையாம்!
திரை நட்சத்திரங்கள் பலர் மிகப் பெரிய வாகன பிரியர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. என்ன ஒரு சிலர் ஆடம்பர கார்களை அதிகம் விரும்புபவர்களாக இருக்கின்றனர், ஒரு சிலர் பிரீமியம் தர மோட்டார்சைக்கிளை அதிகம் விரும்புபவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் மிகப் பெரிய பைக் லவ்வராக இருக்கின்றார்.
இவரிடத்தில் ஒட்டுமொத்தமாக 18க்கும் அதிகமான சூப்பர் பைக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக்குகள் மட்டுமில்லைங்க இந்த ஆக்டரித்தில் பல அரிய வகை சொகுசு மற்றும் ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்களும் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், லம்போர்கினி கல்லர்டோ, நிஸான் ஜிடி-ஆர், இசுஸு வி கிராஸ் மற்றும் போர்ஷே கெயன்னே எஸ்யூவி என பலதரப்பட்ட மிக மிக விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

ஆனால், ஜான் ஆபிரகாமுக்கு இருசக்கர வாகனங்களே அதிகளவில் பிடிக்கும் என்பதால் அவர் அதிகளவில் மோட்டார்சைக்கிள்களிலேயே தரிசனம் வழங்கி வருகின்றார். அதாவது, தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு அவர் பைக்கையே பயன்படுத்தி வருகின்றார். மேலும், மும்பை வாசிகள் பலர் இவரை சொகுசு கார்களில் பார்த்ததைவிட சூப்பர் பைக்குகளில் பார்த்ததே அதிகம் என்கின்றனர்.
அந்த அளவிற்கு மிகப் பெரிய டூ-வீலர் காதலராக ஜான் ஆபிரகாம் இருக்கின்றார். இந்த நிலையிலேயே சமீபத்தில் இவர் அளித்த பேட்டியின் வாயிலாக ஓர் உண்மை தெரிய வந்தது. அவர் அடிக்கடி இருசக்கர வாகனங்களை அதிக விலைக் கொடுத்து வாங்கி நல்ல பிரீமியம் விலையிலேயே சந்தையில் விற்றுவிடுவார் என்கிற தகவலே தெரிய வந்திருக்கின்றது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த தகவல் தெரிய வந்தது. ஜான் ஆபிரகாம் இடத்தில் அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவ்வாறு அவர் நடிகரிடத்தில், "நீங்கள் குறைவான விலையில் பைக்குகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறதே, அது உண்மையா" என கேட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஜான் ஆபிரகாம். "நான் ஒரு போதும் மலிவு விலை பைக்குகளை வாங்குவதில்லை" என்றார். மேலும், "தான் எப்போதும் அதிக விலைக் கொண்ட ஆடம்பர வகை பைக்குகளை மட்டுமே வாங்குவதாகவும்" அவர் தெரிவித்தார். அவற்றில் பெரும்பாலானவை எப்போதும் அப்போதுதான் ஷோரூமில் எடுத்து வந்தவைபோல் இருக்கும்.

ஏனெனில், ஜான் ஆபிரகாம் வெளியில் போவது குறைவது என்பதாலும், அதிக எண்ணிக்கையில் பைக்குகள் இருப்பதாலும், பயன்படுத்திய பைக்கையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிவதில்லை. ஆகையால், அவரிடத்தில் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள் பெரிய அளவில் பயன்படுத்தாதவையாகக் காட்சியளிக்கின்றன. மேலும், மற்ற நடிகர்களைப் போலவே தன்னுடைய வாகனங்களை மிக சிறப்பாக பராமரிப்பதில் பெயர் போனவராக ஜான் ஆபிரகாம் இருக்கின்றார்.
இதன் விளைவாகவே அவருடைய வாகனங்கள் அனைத்தும் எப்போதும் புதிதுபோல் காட்சியளிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே ஜான் ஆபிரகாம் வைத்திருக்கும் வாகனங்களக்கு நல்ல மதிப்பு சந்தையில் நிலவுகின்றது. இதுதவிர ஜான் ஆபிரகாம் ஓர் முன்னணி நடிகர் ஆவார். சொல்லவா வேண்டும், இந்த ஒரு காரணத்திற்காகவே அவர் பயன்படுத்திய ஒரு ரூபாய் பொருளைக்கூட பல ஆயிரங்கள் என்ன, லட்சக் கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுத்து வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கின்றனர்.
இவர் மீது அதீக காதல் கொண்ட அவரது ரசிகர்கள், ஜான் ஆபிரகாம் பயன்படுத்திய டூ-வீலர்களை அதிக பிரீமியம் தொகையைக் கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கின்றனர். இதனாலேயே அவர் விற்பனைச் செய்யும் வாகனங்கள் அதிக விலைக்கு போகின்றன. ஆனால், இதுவரை அவர் தன்னிடம் இருந்த எந்தெந்த டூ-வீலர்களை விற்றார்?, எவ்வளவு ரூபாய்க்கு விற்றார்?, என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஜான் ஆபிரகாம் இடத்தில் யமஹா வி மேக்ஸ், ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்-ஆர், யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்1, டுகாட்டி பனிகேல், எம்வி அகஸ்டா எஃப்3 800, கேடிஎம் ட்யூக், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர், அப்ரில்லா ஆர்எஸ்வி4 ஆர்எஃப், டுகாட்டி டியாவல், சுஸுகி டியவல், சுஸுகி 100 எஸ்எக்ஸ் என எக்கசக்க பைக் மாடல்களுக்கு அவர் உரிமையாளராக இருக்கின்றார்.
இவை மட்டுமில்லைங்க, ராஜ்புதனா கஸ்டம்ஸ் லைட்ஃபூட், புல் சிட்டி அகுமா, யமஹா எஃப்இசட் வி2 மற்றும் கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ் 14ஆர் உள்ளிட்ட பைக் மாடல்களும் நடிகரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நடிகர் டூ-வீலர் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பதனாலேயே அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் கார்களைக் காட்டிலும் அதிகம் டூ-வீலர்களை அவர் பயன்படுத்தி இருப்பார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்திய திரைப்படமான பதான்-இல் கூட புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக்கையே ஜான் ஆபிரகாம் பயன்படுத்தி இருப்பார். இத்தகைய வெறி பிடித்த டூ-வலர் காதலரே ஜான் ஆபிரகாம் ஆவார். இவரே சில நேரங்களில் நல்ல விலைக்கு தான் பயன்படுத்தி வந்த பைக்குகளை விற்று வருகின்றார்.


Click it and Unblock the Notifications









