பலரது கனவு பைக் ஆச்சே... டுகாட்டிக்கு என்ன தான் ஆச்சு!! 30 வருடங்களுக்கு பின் மீண்டும் பழைய ஃபார்முலாவில்!

டுகாட்டி (Ducati) நிறுவனம் அதன் புதிய ஹைப்பர்மோட்டார்ட் மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்துள்ளது. சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் உலகின் ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிளாக விளங்கும் இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்று நாம் சாலையில் பார்க்கும் பெரும்பாலான பைக்குகள் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்டவை ஆகும். ஏனெனில், பெரும்பாலான இந்திய மக்கள் வாங்கும் 125சிசி- 250சிசி பைக்குகளுக்கு சிங்கிள்-சிலிண்டர் என்ஜினே போதுமானது. ஆனால், 500சிசி-க்கு மேல் சென்றால் டபுள்-சிலிண்டர் என்ஜினை வழங்கும் யுக்தியை பைக் தயாரிப்பு நிறுவனங்கள் கையாளுகின்றன.

ducati hypermotard 698 mono unveiled

உதாரணத்திற்கு, ராயல் என்பீல்டின் 650சிசி பைக்குகள் அனைத்தும் டபுள்-சிலிண்டர் என்ஜினை கொண்டவை ஆகும். ஆனால், டுகாட்டி சற்று வித்தியாசமாக யோசித்து, ஆற்றல்மிக்க ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ பைக்கில் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பொருத்தி உள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 650சிசி பைக்கில் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினா? என்கிற ஆர்வத்திலேயே புதிய ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ பைக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

டுகாட்டி நிறுவனம் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு ஓர் சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளது. கடைசியாக, 1993இல் சூப்பர்மோனோ என்கிற பெயரில் ஓர் சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிள் டுகாட்டி நிறுவனத்தில் இருந்து வெளிவந்தது. சூப்பர்மோனோ ஆனது ஓர் ரேஸ்-ஒன்லி பைக் ஆகும். அதாவது இதனை சாதாரண சாலைகளில் ஓட்ட கூடாது.

ducati hypermotard 698 mono unveiled

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ பைக்கிற்கு விற்பனையில் கேடிஎம் நிறுவனத்தின் 690 எஸ்.எம்.சி.ஆர் மற்றும் ஸ்வீடன் நாட்டு பைக்குகளான ஹஸ்க்வர்னா 701 சூப்பர்மோட்டோ மற்றும் கேஸ்கேஸ் எஸ்.எம்700 உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன. புதிய 659சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பெற்றுள்ள ஹைப்பர்மோட்டார்ட் பைக் மிகவும் காம்பெக்ட் ஆனது ஆகும். அதாவது, இந்த புதிய டுகாட்டி பைக்கின் நீளம் குறைவே.

இந்த பைக்கின் 659சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினில் கிடைமட்டமான வடிவில் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், டெஸ்மோட்ரோமிக் வால்வு ஆப்ரேஷன், 116மிமீ பிஸ்டனையும் இந்த பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் வழங்கியுள்ளதாக டுகாட்டி தெரிவித்துள்ளது. இதில் 116மிமீ பிஸ்டன் ஆனது டுகாட்டியின் 1299சிசி பனிகளே பைக்கின் வி-ட்வின் என்ஜினில் இருந்து பகிரப்பட்டுள்ளது.

ducati hypermotard 698 mono unveiled

புதிய டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 659சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 9,750 ஆர்பிஎம்-இல் 77.5 பிஎச்பி வரையிலான பவரை பைக்கிற்கு வழங்கக்கூடியது. இந்த சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை அதிகப்பட்சமாக 10,250 ஆர்பிஎம் வேகத்தில் இயங்க வைக்க முடியும். அதேபோல், ரேஸ் டிராக்கிற்கான டெர்மிக்னோனி எக்ஸாஸ்ட் குழாயை பைக்கில் பொருத்துவதன் மூலம் 84.5 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வி2, வி4 என ஆற்றல்மிக்க என்ஜின்களை தனது பைக்குகளில் பொருத்திவரும் டுகாட்டி நிறுவனம் திடீரென சிங்கிள்-சிலிண்டர் என்ஜினின் பக்கம் மீண்டும் சென்றிருப்பது மற்ற நிறுவனங்களை மட்டுமின்றி, டுகாட்டி நிறுவன ஊழியர்களையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளது. ஆக மொத்தத்தில், டுகாட்டி நிறுவனத்தில் சிங்கிள்-சிலிண்டர் பைக்குகளில் இருந்து மல்டி-சிலிண்டர் பைக்குகள் வரையில் தற்சமயம் தயாராகுகின்றன.

Article Published On: Friday, November 3, 2023, 22:44 [IST]
English summary
Ducati hypernotard 698 mono single cylinder engine bike unveiled
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X