அஜீத்துக்கு பிடிச்ச பைக் நிறுவனம் செய்த காரியம்! விடாமுயற்சி ஷூட்டிங் நடக்கறது கஷ்டம்தான்!
டுகாட்டி பேனிகேல் வி4 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. ரூ 69.90 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கின் புக்கிங் டுகாட்டி டீலர்ஷிப்களில் துவங்கியுள்ளது. இந்த பைக்கில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது? இந்த பைக் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
டுகாட்டி நிறுவனம் தனது பேனிகேல் வி4 பைக்கின் உயர் ரக வெர்ஷனாக பேனிகேல் வி4 ஆர் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பழைய வி4 பைக்கில் இருந்து பல மெக்கானிக்கல் மற்றும் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்காக இந்திய ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த பேனிகேல் வி4 ஆர் பைக் இன்ஜினை பொறுத்தவரை 998 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஆறாவது கீயரில் 16,500 ஆர்பிஎம் வரை செயல்படும் திறன் கொண்டது. அதே நேரம் மற்ற கியரில் 16,000 ஆர்பிஎம் வரை செயல்படும் திறன் கொண்டது.
இந்த பைக்கின் இன்ஜின் 15,500 ஆர்பிஎம் -ல் 215 பிஎச்பி பவரை அதிகபட்ச பவராக வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதே நேரம் 12,000 ஆர்பிஎம்மில் 111.3 என்எம் டார்க் திறனை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் பை-டைரக்சஷனல் குவிக் ஸ்விஃப்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஃபுல் ரேஸிங் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டால் 15,500 ஆர்பிஎம்-ல் 233 பிஎச்பி பவரையும், 118 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறும். இந்த ரேஸிங் எக்ஸாஸ்ட் பைக்கின் மொத்த எடையை 172 இல் இருந்து 167 ஆக குறைக்கிறது.
இந்த பைக்கின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் 43மிமீ ஓஹ்லின்ஸ் என்பிஎக்ஸ் 25/ 30 முன்பக்க ஃபோர்க் மற்றும் ஓஹக்லின்ஸ் டிடிஎஸ் 36 பின்பக்க மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன் பக்கம் 320மிமீ ட்வின் டிஸ்க் மற்றும் பின்பக்கம் பிரம்போ மோனோபிளாக் ஸ்டைல் மா எம் 4.30 கேலிபர் 4 பிஸ்டன் கூடிய பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

டுகாட்டி நிறுவனத்திலும் ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் பேக்கேஜஸ்கள் உள்ளனையில் பேனிகேல் வி 4 ஆர் பைக்கை பொறுத்தவரை டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடு பை , ரைடிங் மோடுகள், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், பவர் மோடுகள், கார்னரிங் ஏபிஎஸ், லான்ச் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது.
இதுபோக இந்த பைக்கில் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பைக்கில் பல பங்க்ஷன்களை கண்ட்ரோல் செய்து கொள்ளலாம். இந்த பைக் இந்தியாவில் ரூ 69.90 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் 5 பைக்குகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குகளை புக்கிங் செய்தவர்களுக்கு உடனடியாக டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் டுகாட்டி நிறுவன தயாரிப்புகளின் மிகப்பெரிய ரசிகர். இவர் திரைப்படங்களில் கூட டுகாட்டி பைக்கை ஓட்டியுள்ளார். இந்நிலையில் தற்போது விடா முயற்சி திரைப்படத்திற்கான சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் இந்த பேனிகேல் வி4ஆர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தை சூட்டிங்கை நிறுத்திவிட்டு இந்த பைக்கில் பைக் ட்ரிக் கிளம்பும் மைண்ட் செட்டை உருவாக்கினாலும் ஆச்சரிபயப்பட ஒன்றும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பவர்ஃபுல் பைக்குகளில் இந்த பேனிகேல் வி4 ஆர் பைக்கும் ஒன்று. டுகாட்டி ரசிகர்கள் பலர் இந்த பைக்கின் வருகைக்காக காத்திருந்தனர். தற்போது அவர்கள் இந்திய மண்ணில் இந்த பைக்கை ஓட்டிச் செல்லும் வாய்ப்பை பெறுகின்றனர். விலையைப் பற்றி கவலைப்படாமல் பெர்ஃபார்மன்ஸ் பற்றி மட்டும் யோசிக்கும் பைக் விரும்பிகளுக்கு இந்த பைக் ஒரு நல்ல சாய்ஸ்


Click it and Unblock the Notifications









