தெரியாத்தனமா காரோட விலையை நிர்ணயிச்சுட்டாங்களா!.. டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி இந்தியாவில் அறிமுகம்!..

தெரியாத்தனமா காரோட விலையை நிர்ணயிச்சுட்டாங்களா, என நினைக்கும் அளவிற்கு மிக மிக அதிக விலையை டுகாட்டி நிறுவனம் தன்னுடைய புதிய பைக் ஒன்றிற்கு நிர்ணயம் செய்திருக்கின்றது. டுகாட்டி நிறுவனம் மான்ஸ்டர் எஸ்பி எனும் பைக் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இதற்கே உச்சபட்ச விலையாக ரூ. 15.95 லட்சம் அது நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில், இரண்டு டாடா நெக்ஸான் கார்களை வாங்கிவிட முடியும். இந்தியர்களின் மிகவும் நம்பகமான கார் மாடலாக டாடா நெக்ஸான் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

Ducati monster sp front profile

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் இதுவாகும். இதன் ஆரம்ப விலை ரூ. 7.80 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதைவிட 100 சதவீதம் அதிக விலையைக் கொண்டதாகவே மான்ஸ்டர் எஸ்பி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

அறிமுகத்தைத் தொடர்ந்து பைக்கிற்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக மான்ஸ்டர் எஸ்பி பைக்கை டெலிவரி கொடுக்க இருப்பதாக டுகாட்டி அறிவித்து இருக்கின்றது. இந்த பைக்கை டிராக் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு டுகாட்டி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

Ducati monster sp

அதேவேளையில், சாலையில் வைத்து இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். பைக்கின் சூப்பர் ஃபாஸ்ட் வேக திறனுக்காக டுகாட்டி நிறுவனம் டெஸ்டஸ்ட்ரெட்டா 11டிகிரி எஞ்ஜினை பயன்படுத்தி இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு மோட்டார் ஆகும். டெஸ்மோட்ரோமிக் டிஸ்டிரிபியூசன் வசதிக் கொம்ட 4 வால்வ் ட்வின் மோட்டார் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

111 எச்பி மற்றும் 93 என்எம் டார்க்கை திறனை இந்த மோட்டார் வெளியேற்றும். ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் குயிக் ஷிஃப்டர் கொண்ட 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மான்ஸ்டர் எஸ்பி-யில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் பைக் ரைடை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும்.

Ducati monster sp front design

குறிப்பாக த்ரில்லான ரைடு அனுபவத்தை வழங்கும். இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் ரேஸ் ட்ராக்கில் பைக்கை ஓட்டும் அனுபவத்தை இந்த மான்ஸ்டர் எஸ்பி நமக்கு வழங்கும். அதேவேளையில், பொது சாலைகளில் ஓட்டுவதற்கு உகந்த பைக்காகவும் இதனை டுகாட்டி வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், சாலையில் இப்பைக்கை லீகலாக ஓட்டிக் கொள்ள முடியும்.

இந்த பைக்கில் ரைடிங் அனுபவத்தை மேலும் உற்சாகமானதாக மாற்றும் பொருட்டு 4.3 அங்குல வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார்னரிங் ஏபிஎஸ், மூன்று விதமான ரைடிங் மோட்கள், 8 லெவல்கள் கொண்ட டிடிசி, 4 லெவல்கள் கொண்ட டிடபிள்யூசி மற்றும் லான்ச் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் மான்ஸ்டர் எஸ்பி பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Ducati monster sp headlamp

டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் ஒட்டுமொத்த எடை 186 கிலோ ஆகும். மான்ஸ்டர் பைக்கின் வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் 2 கிலோ எடை குறைவு இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எடை குறைப்பிற்காக, இலகு ரக பிரேக்குகளை பைக்கின் முன் பக்கத்திலும், லித்தியம் அயன் பேட்டரியையும் மான்ஸ்டர் எஸ்பியில் டுகாட்டி பயன்படுத்தி இருக்கின்றது.

மேலும், இதன் ஒஹ்லின்ஸ் சஸ்பென்ஷனும் இதன் எடை குறைவிற்கு காரணமாக இருக்கின்றது. டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி பைக்கில் முழு அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்ட 43 மிமீ அளவுள்ள ஓஹ்லின்ஸ் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதை பைக்கின் முன் பக்கத்தில் காண முடியும். பின் பக்கத்தில் ஓஹ்லின்ஸ் ஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி நிறுவனம் மான்ஸ்டர் எஸ்பி பைக்கிற்கு நிர்ணயித்திருக்கும் விலையில் இந்தியாவில் மிக உயரிய வசதிக் கொண்ட சில கார்களையே வாங்கிக் கொள்ள முடியும். அதேவேளையில், இந்த பைக்கில் கிடைக்கும் உற்சாகமான ரைடு அனுபவத்தை அந்த கார்களில் பெற்றுக் கொள்ள முடியும். அதிக விலைக்கு ஏற்பவே இந்த பைக்கில் அதிக வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது, டுகாட்டி.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 3, 2023, 8:57 [IST]
English summary
Ducati launches all new monster sp in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X