அம்பானி, சரவணா ஸ்டோர் ஓனரே இந்த பைக்க வாங்க யோசிப்பாங்க.. அவ்ளோ அதிக விலையில் இந்த பைக் விற்பனைக்கு வர போகுதா!
உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati) இந்தியாவில் அதன் சிறப்பு பதிப்பு பைக் மாடல் ஒன்றிற்கு புக்கிங்கைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன பைக்? அதன் சிறப்புகள் என்ன? மிக முக்கியமாக இதன் விலை ரூ. 72 லட்சம் என கூறப்படுவது உண்மை-தானா என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டுகாட்டி (Ducati) நிறுவனம் அதன் புதிய சிறப்பு பதிப்பு பைக் மாடல் ஒன்றிற்கு இந்தியாவில் புக்கிங்கை ஏற்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றாக ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 (Ducati Streetfighter V4) காட்சியளிக்கின்றது.

இந்த மாடலின் சிறப்பு பதிப்பிற்கான புக்கிங்கையே டுகாட்டி தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 லம்போர்கினி எடிசன் (Streetfighter V4 Lamborghini edition), இதுவே அந்த சிறப்பு பதிப்பு ஆகும். இந்த மாடலுக்கே நிறுவனம் புக்கிங்கை ஏற்கத் தொடங்கி இருக்கின்றது.
லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார் மாடல்களை தழுவியே இந்த பைக்கை டுகாட்டி தயார் செய்திருக்கின்றது. இதனால்தான் நிறுவனம் பைக்கின் பெயருடன் லம்போர்கினி எனும் பெயரையும் சேர்த்து இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூபாய் 72 லட்சம் நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், இந்த பைக் விற்பனைக்கு வரும்போது இதைவிட அதிக விலையில் விற்பனைக்கு வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், வழக்கமான ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 மாடலைக் காட்டிலும் அதிகம் பிரீமியம் வசதிகள் தாங்கியதாக இதனை உருவாக்கி இருப்பதே ஆகும்.
இதுதவிர, இந்த பைக்கை லம்போர்கினியின் உலக புகழ்பெற்ற சூப்பர் கார் மாடல்களில் ஒன்றான எஸ்டிஓ-வை தழுவியே உருவாக்கி இருக்கின்றது. இதுவும் பைக் அதிக விலையில் விற்பனைக்கு வருவதற்கான காரணம் ஆகும். அதேவேளையில், இது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), ஆடி (Audi) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனங்களின் அதிக லக்சூரி அம்சங்களைத் தாங்கிய உயர்நிலை கார் மாடல்களின் விலை ஆகும்.

ஆமாங்க, இந்த பைக்கை வாங்கும் விலையில் ஒரு பிரமாண்ட சொகுசு வசதிகளைத் தாங்கிய ஆடம்பர காரையே வாங்கிவிட முடியும். வழக்கமான ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 பைக் என்ன டிசைனில் இருக்குமோ அதே டிசைனிலேயே ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 லம்போர்கினி எடிசனும் காட்சியளிக்கின்றது.
அதேவேளையில், வண்ணத்தைப் பொருத்தவரை இந்த பைக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான வண்ண பூச்சு வேலை பார்க்கப்பட்டு இருக்கின்றது. சிட்ரியா கிரீன் (Citrea Green) மற்றும் டேக் ஆரஞ்சு (Dac Orange) ஆகிய நிறங்களினாலயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதே நிறத்தையே லம்போர்கினி நிறுவனம் அதன் ஹூராகேன் எஸ்டிஓ சூப்பர் கார்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதுபோன்று லம்போர்கினி ஹூராகேன் எஸ்டிஓ சூப்பர் காரை ஒத்துப்போகும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்றது. மேலும், இந்த சிறப்பு பதிப்பை வெறும் 630 யூனிட்டுகளை விற்பனைக்காக தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஏதோ ஒரே ஒரு நாட்டிற்கான யூனிட்டுகள் என எண்ணிக் கொள்ள வேண்டாம்.
இதுவே ஒட்டுமொத்த உலகத்திற்குமான யூனிட்டுகள் ஆகும். இதில் 63 யூனிட்டுகளை வேற லம்போர்கினி வாடிக்கையாளர்களை ஒதுக்கீடு செய்திருப்பதாக டுகாட்டி அறிவித்து இருக்கின்றது. ஆகையால், பாக்கி உள்ள யூனிட்டுகளையே மற்றவர்களால் வாங்கிக் கொள்ள முடியும். எஞ்சினைப் பொருத்த வரை டுகாட்டி ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 லம்போர்கினி எடிசனில் 1,103 சிசி லிக்யூடு கூல்டு வி4 மோட்டார்பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 208 பிஎச்பி பவரையும், 123 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பன்முக ரைடிங் மோட்கள், பவர் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ டையர் காலிபரேஷன் என ஏகப்பட்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்றது.
தொடர்ந்து, இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெரும்பாலான பாகங்கள் கார்பன் ஃபைபரால் தயார் செய்யப்பட்டவை ஆகும். முன் மற்றும் பின் பக்க ஃபென்டர்கள், டேங்க் கவர் மற்றும் பெல்லி பேன், ஹீல் குவார்டு, பின் பக்க இருக்கை பேட், டிஎஃப்டி டேஷ் கவர், இக்னிஷன் ஸ்விட்ச் கவர் மற்றும் ரியர் ஸ்பிராக்கட் புரடெக்டர் ஆகியவையே காரபன் ஃபைபரால் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல சிறப்புகளையும் தனித்துவமான அம்சங்களையும் இந்த பைக் தாங்கி இருக்கின்றது. இதனால்தான் ஆடம்பர கார்களுக்கு இணையான விலையில் இந்த பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஓர் சூப்பர் பைக்கிற்கே தற்போது இந்தியாவில் புக்கிங்குகள் தொடங்கி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலை உயர்ந்த பைக்குகள் பல விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், கோடி ரூபாயைத் தொடும் அளவிற்கு அதிக விலைக் கொண்ட ஓர் பைக் விற்பனைக்கு வருவது அரிதினும் அரிதான நிகழும். இத்தகைய சம்பவமே விரைவில் இந்தியாவில் அரங்கேற இருக்கின்றது. இதுமாதிரியான விலை உயர்ந்த பைக்கை முகேஷ் அம்பானியாகவே இருந்தாலும் சற்றே அதை வாங்க தயங்குவார் என்றே நம்மால் யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









