டுகாட்டி பைக் வாங்கும் கனவை நிஜமாக்குறது இன்னும் கஷ்டம் போலயே!! 2024இல் அதிரடி சம்பவம் இருக்கு!

டுகாட்டி (Ducati) நிறுவனம் இந்தியாவில் அதன் மோட்டார்சைக்கிள்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. இதன்படி, இந்திய மார்க்கெட்டில் டுகாட்டி பைக்குகளின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளன? என்பதையும், டுகாட்டி பைக்குகளில் இந்த விலை அதிகரிப்பு எப்போதில் இருந்து அமலுக்குவர உள்ளது என்பதையும் இனி பார்க்கலாம்.

நாட்கள் உருண்டோட, அதற்கேற்ப பொருட்களின் மதிப்பும் அதிகரிப்பதால், விலை உயர்வுகள் தவிர்க்க முடியாதவைகளாக உள்ளன. இதில் ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா? ஆட்டோமொபைல் வாகனங்களின் விலைகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அதிகரிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் டுகாட்டி நிறுவனம் அதன் பைக்குகளின் விலைகளை இந்தியாவில் அதிகரிக்கிறது.

ducati price revision from 2024

இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி அதன் பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை வருகிற 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு விலை அதிகரிப்புகளை கொண்டுவரும் போதிலும், மோட்டார்சைக்கிள்களை ஸ்டைலாகவும், நுட்பமாகவும் மற்றும் நிகரற்ற செயல்திறன் உடனும் வழங்குவதில் டுகாட்டி உறுதியாக உள்ளது.

இதுகுறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்த்ரா கூறுகையில், "உற்பத்தி தொடர்பான செயல்பாட்டு மற்றும் பிற செலவுகளின் அதிகரிப்பு காரணமாக, பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் பிராண்டின் நிலைப்பாட்டை தொடரும் அதே வேளையில், பைக்குகள் தயாரிப்பு தரத்தின் லிமிட்டிற்குள் இந்த விலை திருத்தம் கொண்டுவரப்படுகிறது" என்றார்.

ducati price revision from 2024

இந்தியாவில் இந்த இத்தாலிய பைக் பிராண்டில் இருந்து மல்டிஸ்ட்ராடா வி4 எஸ் கிரண்ட் டூர், டெசர்ட் எக்ஸ் ராலி, மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்.எஸ் மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அனைத்து விதமான டுகாட்டி பைக்குகளின் விலைகளும் அதிகரிக்கப்பட போவதில்லை. குறிப்பிட்ட டுகாட்டி பைக்குகளின் விலைகள் மட்டுமே அதிகரிக்கப்பட உள்ளன.

எந்தெந்த மோட்டார்சைக்கிள்களின் விலைகளை அதிகரிக்கவுள்ளது என்பதை விரைவில் டுகாட்டி அறிவிக்கும். இந்த விலை அதிகரிப்புகளின்படி, டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 இலட்சமாக அதிகரிக்க உள்ளது. டுகாட்டி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டுமின்றி, புதுடெல்லி, மும்பை, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், சட்டீஸ்கர், அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிலும் ஷோரூம்கள் உள்ளன.

ducati price revision from 2024

டுகாட்டி நிறுவனத்தில் இருந்து கடைசியாக, கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 698 மோனோ என்ற சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின் டுகாட்டி நிறுவனம் ஓர் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பைக்கை உருவாக்கி உள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 659சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 77.5 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்திய மக்களை பொறுத்தவரையில், டுகாட்டி பைக்குகள் ஏற்கனவே விலைமிக்கவை ஆக கருதப்படுகின்றன. அப்படியிருக்கையில், டுகாட்டி நிறுவனம் வருகிற 2024ஆம் ஆண்டை விலை உயர்வுடன் துவங்க உள்ளது. ஆனால், இந்த விலை உயர்வுக்கான காரணத்தையும், வழக்கம்போல் இதை ஏன் கொண்டு வருகிறோம் என்பதையும் டுகாட்டி தெளிவுப்படுத்தி உள்ளது. டுகாட்டி பைக்குகள் ஒவ்வொன்றின் விலையும் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளது என்பதை அறிய எங்களுடன் தொடர்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, December 8, 2023, 23:09 [IST]
English summary
Ducati price revision for select models check all details here
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X