வரும் நவம்பரில் அறிமுகமாகிறது உலகின் அதிக பவர்ஃபுல் சிங்கிள் சிலிண்டர் மோட்டார்... ஜெட் வேகத்தில் சீறி பாயலாம்

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டுகாட்டி (Ducati), 30 ஆண்டுகளுக்கு பின்னர் புத்தம் புதிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் (Single Cylinder Engine)-ஐ அறிமுகம் செய்திருக்கின்றது.

சூப்பர் குவாட்ரோ மோனோ என்று இந்த புதிய எஞ்ஜின் அழைக்கப்படும். இந்த எஞ்ஜினே உலகின் அதிக பவர்ஃபுல் சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த எஞ்ஜினை அது வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ducati superquadro mono engine

நிறுவனம் அதன் ஹைபர் மோடார்ட் (HyperMotard)-ஐ தழுவியே இந்த புதிய எஞ்ஜினை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த எஞ்ஜினை பெற இருக்கும் அந்த இருசக்கர வாகனமானது அத்தியாவசிய பயன்பாட்டிற்கு உகந்ததாகவும், இலகு ரக எடைக் கொண்டாதகவும் மற்றும் அதீத வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதனை டுகாட்டி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஆனால், அது எந்த மாடல் என்பது பற்றிய தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே இதன் வருகை மீதான எதிர்பார்ப்பு இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மேலும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

Ducati engine

குறிப்பாக, என்ன மாதிரியான ஸ்டைலில் இது இருக்கும் என்பதே பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. டுகாட்டி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை அதிக கவர்ச்சிக்கும், அதிக அழகிற்கும் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளுக்கும் பெயர்போனவையாக காட்சியளிக்கின்றன. ஆகையால், விரைவில் எதிர்பார்க்கப்படும் புதிய சூப்பர்குவாட்ரோ மோனோ எஞ்ஜின் கொண்ட பைக்கும் அனைத்திலும் மிக சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் புதிய சூப்பர் குவாட்ரோ மோனோ எஞ்ஜின் 659 சிசியை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. பனிகேல் 1299 சிசி எஞ்ஜினையும், 1285 சிசி சூப்பர் குவாட்ரோ எஞ்ஜினையும் தழுவியே புதிய எஞ்ஜினை டுகாட்டி வடிவமைத்து இருக்கின்றது.

இதன் திறன் வெளிப்பாடு 76.43 பிஎச்பி மற்றும் 62.76 என்எம் டார்க்காக இருக்கும் என்றும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகின்றது. இத்துடன், புதிய யூரோ 5 தர மாசு கட்டுப்பாட்டிற்கு உகந்த எஞ்ஜினாகவும் புதிய மோட்டார் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதுதவிர, ரைடு-பை-ஒயர் தொழில்நுட்பம் மூன்று விதமான ரைடிங் மோட்களுடன் புதிய எஞ்ஜினுடன் விற்பனைக்கு வர இருக்கும் பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது. ஹை, மீடியம் மற்றும் லோவ் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், 6 ஸ்பீடு யூனிட் கியர்பாக்ஸும் அதில் வழங்கப்பட இருக்கின்றது.

அதேநேரத்தில், இதன் முதல் கியரிலேயே மிக சிறந்த வேக திறனை பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், ஸ்லோவாக கார்னர்களில் திரும்பவும் முதல் கியர் மிகுந்த உதவியாக இருக்கும். இதுதவிர, இந்த கியர்பாக்ஸில் டுகாட்டி குயிக் ஷிஃப்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

டுகாட்டி இந்த புதிய தயாரிப்பை சற்று மலிவான விலையில் விற்பனைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுபோன்று புதிய எஞ்ஜின் கொண்ட பைக்கின் பல முக்கிய தகவல்களை நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கின்றது. விரைவில் அதுகுறித்த தகவல்களை அது வெளியடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெரும்பாலானவை அழகிற்கும், அதிக திறன் வெளிப்பாட்டிற்கும் பெயர்போனவையாக இருக்கின்றன. ஆகையால், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஞ்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிளும் அழகு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் மிக சிறந்ததாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 17:37 [IST]
English summary
Ducati superquadro mono engine revealed here is more details
மேலும்... #டுகாட்டி #ducati
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+