நெதர்லாந்து மோட்டோஜிபி 2023 முடிவுகள்: டுகாட்டி ரேசர் பெக்கோ தொடர்ந்து முதலிடத்தில்... பிராண்ட் பிண்டெர் சரிவு

பெக்கோ (Pecco) என பலரால் அழைக்கப்படும் வளர்ந்துவரும் மோட்டார்சைக்கிள் பந்தய வீரரான பிரான்செஸ்கோ பக்னையா மீண்டும் மோட்டோஜிபி டிடி அஸ்ஸென் பந்தயத்தில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்தும், பந்தயத்தில் இவருக்கு அடுத்த இடங்களை பெற்றிருப்பவர்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

டச்சு டூரிஸ்ட் டிராபி எனப்படும் டிடி அஸ்ஸென் பந்தயம் ஆண்டுந்தோறும் நடைபெறக்கூடிய மோட்டார்ஸ்போர்ட் நிகழ்ச்சி ஆகும். 1925ஆம் ஆண்டில் முதன்முதலாக துவங்கப்பட்ட இந்த போட்டி நெதர்லாந்தில் உள்ள டிடி சர்க்யூட் அஸ்ஸென் என்ற பந்தய களத்தில் நடத்தப்படுகிறது. இந்த பந்தய களத்தில் நடந்தப்படுவதன் காரணமாக டிடி அஸ்ஸென் என்ற பெயர் பந்தயத்திற்கு கிடைத்தது.

dutch motogp 2023 results

உண்மையில் இது ஒரு டச்சு ஜிபி ஆகும். அதாவது, மோட்டோஜிபி பந்தயங்கள் பல்வேறு நாடுகளில் ஆண்டு முழுவதும் நடைபெறும். இந்த முறை முதல்முறையாக நமது இந்தியாவில் கூட வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறவுள்ளது என்றாலும், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் டச்சு ஜிபி என்ற பெயரில் பல வருடங்களாக நடந்தப்படுகிறது.

இந்த வகையில் இந்த 2023ஆம் ஆண்டிற்காக டிடி சர்க்யூட் அஸ்ஸென் பந்தய களத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டியில் எதிர்பார்த்ததை போல் பிரான்செஸ்கோ பக்னையா முதலிடம் பிடித்துள்ளார். பெக்கோ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் டுகாட்டி ஃபேக்ட்ரி குழுவுக்காக போட்டியிடுகிறார். பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளதன் மூலம் பிரான்செஸ்கோ பக்னையா 25 புள்ளிகளை பெற்றுள்ளார்.

dutch motogp 2023 results
Pos. Points Rider Team
1 25 Francesco Bagnaia Ducati Lenovo Team
2 20 Marco Bezzecchi Mooney VR46 Racing Team
3 16 Aleix Espargaro Aprilia Racing
4 13 Brad Binder Red Bull KTM Factory Racing
5 11 Jorge Martin Prima Pramac Racing
6 10 Alex Marquez Gresini Racing MotoGP
7 9 Luca Marini Mooney VR46 Racing Team
8 8 Takaaki Nakagami LCR Honda IDEMITSU
9 7 Franco Morbidelli Monster Energy Yamaha MotoGP
10 6 Augusto Fernandez GASGAS Factory Racing Tech3

2வது இடத்தை மூனி விஆர்46 ரேசிங் குழுவுக்காக பங்கேற்ற மார்கோ பெஸ்ஸேச்சி பெற்றுள்ளார். இவருக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 20 ஆகும். 16 புள்ளிகளை வழங்கும் 3வது இடத்தை பிடித்திருப்பவர் அலெய்க்ஸ் எஸ்பார்கரோ. இவர் அப்ரில்லா ரேசிங் குழுவுக்காக மோட்டோஜிபி-இல் கலந்து கொண்டுள்ளார். இந்த 3வது இடத்தை ரெட்புல் கேடிஎம் குழுவின் ரைடர் பிராட் பிண்டெர் பெற வேண்டியது.

ஆனால் பிராட் பிண்டெர் பந்தயத்தின் போது சாலையை விட்டு விலகி ஆஃப்-ரோடிற்கு சென்றதால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 4வது இடத்திற்கு சென்றுள்ள காரணத்தினால் இவருக்கு கிடைக்கப்பெற்ற புள்ளிகளும் 13ஆக குறைந்துள்ளது. குறைந்த தூரத்தில் அதிகப்பட்ச வேகத்தில் பைக்கை இயக்க அனுமதிக்கப்படும் ஸ்பிரிண்ட் பந்தயத்திலும் இதேபோன்று வேறொரு தவறு செய்ததன் காரணமாக 3வது இடத்திற்கு பதிலாக 4வது இடம் பிராட் பிண்டெருக்கு வழங்கப்பட்டுள்ளது.

dutch motogp 2023 results

ஆஸ்திரேலியன் பைக் ரேசரான ஜாக் மில்லர் முக்கிய போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே மோதலுக்கு உள்ளாகியதால் பந்தயத்தில் இருந்து விலக வேண்டியதாகிவிட்டது. ஜாக் மில்லர் ரெட்புல் கேடிஎம் ரேசிங் குழுவின் சார்பில் பங்கேற்கிறார். ஸ்பிரிண்ட் பந்தயத்தில் முதலிடத்தை மார்கோ பெஸ்ஸேச்சி பெற்றுள்ளார். டிடி அஸ்ஸென் பந்தய களத்தில் ஸ்பிரிண்ட் பந்தயத்தை அதிவேகமாக நிறைவு செய்து மார்கோ பெஸ்ஸேச்சி சாதனை படைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மோட்டோஜிபி பந்தய தொடரில் கோடை காலத்தில் நடத்தப்படும் கடைசி பந்தயமாக மோட்டோஜிபி டிடி அஸ்ஸென் விளங்குகிறது. இத்தகைய பந்தயத்தில் முதலிடம் பெற்றுள்ளதன் மூலம் 2023 மோட்டோஜிபி-இல் பிரான்செஸ்கோ பக்னையா தனது ஆதிக்கத்தை தொடர்கிறார். அதேபோல், புதிய அணியாக களம்கண்டுள்ள மூனி விஆர்46 ரேசிங் குழு மற்ற குழுக்களுக்கு சவாலாக விளங்குகிறது.

Pos. Points Rider Team
1 194 Francesco Bagnaia Ducati Lenovo Team
2 159 Jorge Martin Prima Pramac Racing
3 158 Marco Bezzecchi Mooney VR46 Racing Team
4 114 Brad Binder Red Bull KTM Factory Racing
5 109 Johann Zarco Prima Pramac Racing
6 98 Luca Marini Mooney VR46 Racing Team
7 79 Jack Miller Red Bull KTM Factory Racing
8 77 Aleix Espargaro Aprilia Racing
9 64 Fabio Quartararo Monster Energy Yamaha MotoGP
10 63 Alex Marquez Gresini Racing MotoGP

More from DriveSpark

Article Published On: Monday, June 26, 2023, 19:03 [IST]
English summary
Dutch motogp 2023 pecco continues his dominance
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X