ஒருமுறை சார்ஜ் செய்தால்... சென்னை- பாண்டிச்சேரி செல்லலாம்! இப்படியொரு ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கனும்
புத்தம் புதிய இ-ஸ்பிரிண்டோ அமெரி (e-Sprinto Amery) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான இ-ஸ்பிரிண்டோ அதன் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அமெரி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமெரி ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட இ-ஸ்பிரிண்டோ டீலர்ஷிப் மையத்தில் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இ-ஸ்பிரிண்டோ அமெரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 60 வோல்ட் 50 ஆம்பியர் லித்தியம்-இரும்பு NMC பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 140கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
இந்த பேட்டரி வழங்கும் இயக்க ஆற்றலை 1500 வாட்ஸ் BLDC மோட்டார் பெறுகிறது. ஸ்கூட்டருக்கு சரியாக மத்தியில் பொருத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக அதிகப்பட்சமாக 3.3 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். 0-வில் இருந்து 40kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக மணிக்கு 65கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

அமெரியின் பேட்டரியை 0-100% சார்ஜ் செய்ய 4 மணிநேரங்களே போதுமானது என்கிறது இ-ஸ்பிரிண்டோ நிறுவனம். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், அமெரி ஸ்கூட்டரில் டிஜிட்டல் திரை, ஆண்டி-தீஃப்ட் அலார்ம், ரிமோட் கண்ட்ரோல் லாக், மொபைல் சார்ஜிங் சாக்கெட், ஃபைண்ட் மை வைகல் செயலி உள்பட ஏகப்பட்டவற்றை இ-ஸ்பிரிண்டோ நிறுவனம் வழங்கியுள்ளது.
தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதி 200மிமீ உயரத்தில் உள்ளது. இதனால் மேடு, பள்ளம் மிகுந்த சாலைகளிலும் ஸ்கூட்டரை பிரச்சனையின்றி ஓட்டி செல்ல முடியும். வெறும் 98 கிலோ மட்டுமே எடை கொண்டதாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போதுமான வேகத்தில் 12-கோண ஏறுமுகமான சாலைகளில் தாராளமாக ஏற்ற முடியும். இந்த ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 150 கிலோ வரையில் எடைமிக்க பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

பிரேக்கிங் பணியை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் கவனித்து கொள்கின்றன. இ-ஸ்பிரிண்டோ அமெரி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மொத்தம் 3 விதமான பெயிண்ட் தேர்வுகளில் தேர்வு செய்யலாம். பிளிஸ்ஃபுல் வெள்ளை, ஸ்டார்டி கருப்பு மற்றும் ஹை-ஸ்பிரிட் மஞ்சள் என்பவை அந்த 3 பெயிண்ட் தேர்வுகளாகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: அதிவேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் சந்தையில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இ-ஸ்பிரிண்டோவின் அமெரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களம் இறக்கப்பட்டுள்ளது. அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் அதிகப்படியான விலை ஆகும்.


Click it and Unblock the Notifications









