இவ்ளோ கம்மி விலைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!! சைக்கிள் விலையில் தருவதற்கு இவங்களால மட்டும்தான் முடியும்!
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்துக் கொண்டு இருக்கின்றது இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto). தன்னுடைய இந்த வளர்ச்சியை உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக அந்நிறுவனம், மேலும் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooters) மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
ஏற்கனவே பிராண்டின் கீழ் நான்கு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், தற்போது மேலும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றின் இணைவால் இப்போது பிராண்டின் எண்ணிக்கை நான்காக அதிகரித்து இருக்கின்றது.

ரேபோ மற்றும் ரோமி எனும் இரு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே இ-ஸ்பிரிண்டோ தற்போது இந்தியர்களுக்கு விருந்தளிக்கும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றின் விலையும் மிக மிக குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரேபோவிற்கு ரூ. 54,999ம், ரோமி-யின் விலை ரூ. 62,999ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவே ரேபோ மற்றும் ரோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. காலேஜ் ஸ்டூடன்ஸ், பணிக்கு செல்லும் பெண்கள் என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டே இந்த வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகையால் அலுவலகம் எடுத்துச் செல்ல மட்டுமல்ல இல்லத் தரசிகள் மார்க்கெட் எடுத்துச் செல்லவும் ஏதுவான டூ-வீலராக இவை இருக்கும்.

இ-ஸ்பிரிண்டோ ரேபோ (e-Sprinto Rapo): இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ வரை பயணிக்கும். லித்தியம்/ லீட் ஆசிட் பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மோட்டாரை பொருத்த வரை 250 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் ஐபி 65 வாட்டர் ப்ரூஃப் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த குறைவான வேகத்தில் செல்லும் திறனை இ-ஸ்பிரிண்டோ ரேபோ கொண்டிருப்பதால் இதை இயக்க லைசென்ஸ் அல்லது பதிவு சான்று என்பது தேவைப்படாது. மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக சிறந் சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் காயில் ஸ்பிரிங் செட்-அப்-ம் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ள முடியும். முன் பக்கத்தில் 12 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் 10 அங்குல வீலுடன் ரியர் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகமான 25 கிமீ வேகத்தைக் கட்டுப்படுத்த இந்த பிரேக்கிங் சிஸ்டமே போதுமானது ஆகும்.
இ-ஸ்பிரிண்டோ ரோமி (e-Sprinto Roamy): இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ரேபோவை போலவே குறைவான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆமாங்க, இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ வரை டிராவல் செய்துக் கொள்ள முடியும்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டால் தானாக சார்ஜை நிறுத்தும் வசதிக் கொண்ட சார்ஜிங் கருவி செட்-அப்பே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்களுடன் சேர்த்து இரண் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ரிமோட் லாக் மற்றும் அன்லாக், ரிமோட் வாயிலாக ஸ்டார்ட் செய்யும் வசதி, எஞ்சின் கில் சுவிட்ச், சைல்டு லாக் சிஸ்டம், பார்க்கிங் மோட் மற்றும் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, வண்ண டிஜிட்டல் திரை ஒன்றும் ரேபோ மற்றும் ரோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக பேட்டரியின் லைவ் ஸ்டேட்டஸ், மோட்டாரில் ஏற்படும் கோளாறுகள், த்ரோட்டில் ஃபெயிலியர் மற்றும் கன்ட்ரோல் ஃபெயிலியர்கள் பற்றிய விபரங்களையும் அறிந்துக் கொள்ள முடியும்.
இத்தகைய அம்சங்களையே குறைவான விலைக் கொண்ட ரேபோ மற்றும் ரோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. நிற தேர்வை பொருத்த வரை ரேபோவில், ரெட், ப்ளூ, கிரே, பிளாக் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களும், ரோமியில் ரெட், ப்ளூ, கிரே, பிளாக் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இ-ஸ்பிரிண்டோ இந்தியாவில் இவ்ளோ மலிவு விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது முன்னணி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஆம்பியர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய இ-ஸ்பிரிண்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை மிகப் பெரிய தலை வலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









