ஒரே ஒரு முறை ஃபுல்லா சார்ஜ் பண்ணினா 140கிமீ அசராம போகும்! சீக்கிரமே ஓலாவுக்கு சங்கு ஊத வரும் புதிய இ-ஸ்கூட்டர்

புதுமுக மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto), அதன் அமெரி (Amery) எனும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto). இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Esprinto Amery

அந்த வாகனம் ஓர் முழு சார்ஜில் 140 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த மின் வாகன பிரியர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்போதையே நிலவரப்படி இந்திய மின் வாகன உலகின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியை மட்டுமே அது பெற்று வருகின்றது. ஆகையால், இந்தியா மின் வாகன உலகின் முடிசூட மன்னனாக ஓலா எலெக்ட்ரிக் காட்சியளிக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு போட்டி அளிக்கும் விதமாகவே இ-ஸ்பிரிண்டோ தனது புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை தயார் செய்திருக்கின்றது.

Esprinto logo

அது, அமெரி (Amery) எனும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதனால் மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மேலும், 150 கிலோ வரையிலான எடையையும் இதனால் தாங்கிக் கொள்ள முடியும்.

இத்தகைய சூப்பரான திறன்கள் கொண்ட வாகனமாகவே இ-ஸ்பிரிண்டோ அமெரி இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது. தினசரி மற்றும் நகர பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு அமெரி-யை உருவாக்கி இருப்பதாக இ-ஸ்பிரிண்டோ தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், அட்டகாசமான கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டதாகவும் அது இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும் ஒரு சில தினங்களில் அமெரி விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த மாத இறுதிக்குள் அமெரி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருப்பதாக கூறுகின்றன. இதைத்தவிர வேறு எந்த முக்கிய விபரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை.

புதிய இ-ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் ஆகியவற்றை அறிமுகத்தை முன்னிட்டு ரகசியம் காத்துக் கொண்டிருக்கின்றது, இ-ஸ்பிரிண்டோ. இந்த இ-ஸ்கூட்டரை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை ஓட்டிக் கொள்ள முடியும். குறிப்பாக, 20 வயது முதல் 35 வயது வரையிலானவர்களுக்கான ஏற்ற வாகமான அமெரியை இ-ஸ்பிரிண்டோ தயார் செய்திருக்கின்றது.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறன் வெளிப்பாடு என அனைத்திலும் இந்த அமெரி மிக சிறந்ததாக இருக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆகையால், அமெரி இ-ஸ்கூட்டர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப் பெரிய போட்டியாளனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நான்கு புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக இ-ஸ்பிரிண்டோ நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையிலேயே அமெரி ஹைஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

இந்த இ-ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நிறுவனம் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் அமெரியை விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், நிச்சயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இ-ஸ்கூட்டரின் வருகை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பெருத்த அடியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அது 100 பேருக்கு சலுகை விலையில் வழங்க இருப்பதால் இ-ஸ்பிரிண்டோவை புக் செய்ய வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 4, 2023, 15:17 [IST]
English summary
E sprinto set to launch amery in india with 140 km on single charger
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+