நவம்பர் 21ம் தேதி என்ன நடக்க போகுதோ! இப்பவே அச்சத்தில் ஓலா, டிவிஎஸ்.. ரேபோ, ரோமி அன்னைக்குதான் அறிமுகமாகபோகுது

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto)-வும் ஒன்றாகும். இந்த துறையில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாகவும் அது காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தன்னுடைய உற்பத்தி செயல்பாட்டில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின்கீழ் மூன்று விதமான மின்சார இருசக்கர வாகன மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இ ஸ்பிரிண்டோ (e Sprinto), ஸ்பிரிண்டோ எச்எஸ் (Sprinto HS) மற்றும் அமெரி (Amery) ஆகியவையே அவை ஆகும். இவற்றின் வரிசையிலேயே இ-ஸ்பிரிண்டோ வெகு விரைவில் இரண்டு புதுமுக தயாரிப்புகளை இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

e-Sprinto to unveil 2 new electric scooters

நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. ரேபோ (Rapo) மற்றும் ரோபோ (Roamy) என்கிற இரண்டு புதிய தயாரிப்புகளை இந்தியாவில் இ-ஸ்பிரிண்டோ விரைவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி அன்றே இந்த இரண்டு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

அன்றைய இந்த புதுமுக வாகனங்கள் குறித்த முக்கிய தகவல்களை இ-ஸ்பிரிண்டோ வெளியிட இருக்கின்றது. ஆமாங்க, இப்போதைய நிலவரப்படி அந்நிறுவனம் அறிமுக நாளை மட்டுமே உறுதி செய்திருக்கின்றது. அந்த வாகனங்கள் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளைத் தாங்கி இருக்கின்றன என்பதை அது அறிவிக்கவில்லை.

e-Sprinto electric scooters

மேலும், இதன் விலைகளும் வெளியிடப்படவில்லை. ஆகையால், புதி ரேபோ மற்றும் ரோமி இந்த இரு இரண்டு சக்கர மின்சார வாகனங்களும் என்ன விலையில் விற்பனைக்கு வரும்? என்ன ரேஞ்ஜை தரும்? என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், இரண்டும் மின்சார ஸ்கூட்டர்கள் என்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 100 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பலவும் ரேபோ மற்றும் ரோமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம் பெற இருப்பதை இ-ஸ்பிரண்டோ உறுதி செய்திருக்கின்றது.

நகர பயன்பாட்டை மையமாகக் கொண்டே இந்த வாகனங்களை இ-ஸ்பிரிண்டோ தயார் செய்திருக்கின்றது. ஆகையால், நாம் எதிர்பார்த்திராத அம்சங்கள் சிலவும் இதில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இஸ்பிரிண்டோ நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை லோ ஸ்பீடு (குறைவான வேகம்) மற்றும் ஹை ஸ்பீடு (அதிக வேகம்) என இரு பிரிவுகளின் கீழே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

லோ ஸ்பீடு பிரிவின்கீழ் இ-ஸ்பிரிண்டோ மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இதை இருவிதமா தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். இ-ஸ்பிரிண்டோ பிபி என்பதே இரண்டாவது தேர்வாகும். இ-ஸ்பிரிண்டோவைக் காட்டிலும் 30 கிமீ கூடுதல் ரேஞ்ஜைத் தரக் கூடியதே இ-ஸ்பிரிண்டோ பிபி ஆகும்.

இ-ஸ்பிரிண்டோ ஓர் முழு சார்ஜில் 70 கிலோ மீட்டர் ரேஞ்ஜை தரும். அதேவேளையில், இந்த வாகனங்களில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும். ஆகையால், இந்த வாகனங்களை பதிவு செய்யவோ அல்லது அதை இயக்க லைசென்ஸோ தேவைப்படாது.

ஹை ஸ்பீடு பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்பிரிண்டோ எச்எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை தாராளமாக வழங்கும். இதைவிட அமெரியும் அதிக ரேஞ்ஜையே வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கின்றது. அது ஓர் முழு சார்ஜில் 140 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். வெஸ்பா ஸ்கூட்டரை போல கவர்ச்சியான கிளாசிக் தோற்றம் கொண்டதே இந்த அமெரி என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவை விரிவாக்கம் செய்யும் பணியில் இ-ஸ்பிரிண்டோ களமிறங்கி இருக்கின்றது. விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் இரண்டு ஸ்கூட்டர்களும் விலை மலிவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 18, 2023, 5:00 [IST]
English summary
E sprinto to unveil rapo roamy electric scooters on 21st november
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+