பணமே இல்லைனாலும் பரவாயில்லை இந்த ஸ்கூட்டரை புக் பண்ணிக்கலாம்.. அக்டோபர் மாசம் கட்டாயம் விற்பனைக்கு வந்திடும்..

இபைக்கோ (eBikeGo) நிறுவனம் இந்தியாவில் நான்காம் தலைமுறை முவி (Muvi) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நான்காம் தலைமுறை மாடலில் என்ன மாதிரியான அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன?, அதன் சிறப்புகள் என்ன? எப்போது விற்பனைக்கு வரும் என்கிற அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் இ-பைக்-கோ (eBikeGo)-வும் ஒன்றாகும். இது எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே மையமமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் புகழ் பெற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக முவி (Muvi) இருக்கின்றது.

eBikeGo muvi

இதன் நான்காம் தலைமுறை வெர்ஷனையே விரைவில் இ-பைக்-கோ இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையை முன்னிட்டே அந்த வாகனத்திற்கான முன்பதிவுகளை இப்போதே இ-பைக்-கோ ஏற்க தொடங்கி இருக்கின்றது. நான்காம் தலைமுறை முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ வருகை வரும் அக்டோபர் மாதம் அரங்கேற இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆகையால், இப்போது இந்த வாகனத்தின் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வேலையில் இ-பைக்-கோ களமிறங்கிவிட்டது. குறிப்பாக, இந்த வாகனத்தின் பக்கம் மின் வாகன பிரியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக புக்கிங்கில் சிறப்பு திட்டத்தை இ-பைக்-கோ அறிவித்திருக்கின்றது. கேஷ்லெஸ் ப்ரீ-புக்கிங்கையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.

eBikeGo muvi front profile

அதாவது, பணமே இல்லாமல் (Cashless Booking) முவி-யை புக் செய்துக் கொள்ளலாம். இதை புக் செய்வதற்கான விண்டோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் திறக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டுமில்லைங்க வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக இ-பைக்-கோ புதிய முவி-யில் பல்வேறு சிறப்பு வசதிகளைச் சேர்த்திருக்கின்றது.

அந்தவகையில், இந்த டூ-வீலரின் உருவாக்கத்தில் ட்யூப்ளர் ஸ்டீல் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அத்துடன், மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

eBikeGo muvi rear profile

இது ஓர் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மென்ட வசதிக் கொண்ட மோனோஷாக் ஆகும். இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஹைட்ராலிக் கம்பைன்ட் பிரேக் சிஸ்டம் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர 220 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 190 மிமீ டிஸ்க் பிரேக் பின் பக்க வீலிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

புதிய தலைமுறை முவியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக அந்த வாகனத்தில் 2x48V/35.2Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை 48V (54.6V max. voltage) 5A மற்றும் 48V (54.6V max. voltage) 10A என இரு வழிகளிலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

முதல் ஒன்றை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது முழுமையாக சார்ஜாக சுமார் 7 மணி நேரங்கள் வரை முவி எடுத்துக் கொள்ளும். அதுவே, இரண்டாவது ஒன்றை பயன்படுத்தினால் சார்ஜிங் நேரம் பாதியாக குறைந்துவிடும். சுமார் 4 மணி நேர இடைவெளியிலேயே முழுமையாக சார்ஜேற்றிவிட முடியும்.

இதுபோன்று சூப்பரான திறன்களையே இ-பைக்-கோ முவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். இதற்காக டோர்ரோட் பிரஷ்லெஸ் 48 வோல்ட் மோட்டார் முவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 3 கிலோவாட் வரையில் பவரை வெளியேற்றும்.

நவீன கால சிறப்பு வசதிகளும் முவியில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், திறமையான 4 அங்குல எல்சிடி திரை, ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் ஓபிடி வசதி என பலதரப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், கேன்-பஸ் (CAN-BUS) வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த வாகனம் சவாலான விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஓலாவின் எஸ்1 ஏர்-க்கே டஃப் கொடுக்கும் வகையில் சற்று குறைவான விலை நிர்ணயம் செய்யப்படும் என யூகிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 8:30 [IST]
English summary
Ebikego opens booking for 4th gen muvi electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X