கோதாவரி நிறுவனத்தின் அட்டகாசமான இ-ஸ்கூட்டர் தயார்! 100சதவீத இந்திய தயாரிப்பு.. இதனால கிடைக்க போகும் பலன் என்ன?

கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் அதன் முன்மாதிரி மின்சார வாகனங்கள் சிலவற்றை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் தனது புதிய படைப்புகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது. அதில் ஒன்றே நிறுவனத்தின் இப்ளூ ஃபியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இது ஓர் கான்செப்ட் மாடலாகும். இதனையே கடந்த வியாழன் அன்று நிறுவனம் காட்சிப்படுத்தியது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

100 சதவீத இந்திய தயாரிப்பு

மேலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாகங்கள் அனைத்தும் இந்திய தயாரிப்புகள் ஆகும். ஆமாங்க, 100 சதவீதம் மேட்-இன் இந்திய தயாரிப்பாக இப்ளூ ஃபியோ உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனம் குடும்ப பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனம் ஆகும். மிகவும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இதை கோதாவரி நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விபரம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 கிலோவாட் மோட்டாரும், 42 Ah பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ செய்தால் 100கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மிக சிறந்த பிரேக்கி அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த அம்சம் இப்ளூ ஃபியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்த வாகனத்தை வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி நடப்பாண்டு ஏப்ரலிலேயே இந்த வாகனம் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த இருசக்கர வாகனம் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் விலையும் பலமடங்கு குறைவாக இருக்கும் என கூறப்படுகின்றது.

வாரண்டி விபரம்

இந்த மின்சார வாகனத்தின் மக்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், 3 ஆண்டுகள் / 50 ஆயிரம் கிமீ வாரண்டியை கோதாவரி நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தில் இன்னும் என்ன மாதிரியான முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

அதேவேளையில் சில முக்கிய தகவல்களை மட்டும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அந்தவகையில், பிஎல்டிசி-ஹப் மோட்டார் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், லித்தியம் அயன் 60 வோல்ட் மோட்டாரும் இப்ளூ ஃபியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 125 கிமீ வரை ரேஞ்ஜை பெற முடியும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். இவற்றுடன், சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக முன்பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ட்வின் ட்யூப் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மொபைல் இணைப்பு அம்சம், ப்ளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 14, 2023, 11:08 [IST]
English summary
Eblu feo auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+