வேற லெவல் ஸ்டைல்!! நியூ ஜென்ரேஷன் பைக் என்றால் இப்படி இருக்கணும் - ஹோண்டாவின் புதிய 1000சிசி பைக்!

ஹோண்டா சிபி1000 ஹார்னெட் (Honda CB1000 Hornet) மோட்டார்சைக்கிள் நடைபெற்றுவரும் EICMA 2023 கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த 1000சிசி ஹோண்டா பைக்கில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் உற்பத்தி செய்யக்கூடிய மிகவும் ஆற்றல்மிக்க 1000சிசி பைக்குகளுள் ஒன்று சிபி1000 ஹார்னெட் ஆகும். இந்த பைக்கை மேம்படுத்தி EICMA 2023 கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு நிறுத்தியுள்ளது. இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் ஹோண்டா சார்பில் பல்வேறு மோட்டார்சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

honda cb1000 hornet revealed

அதில் ஒன்றுதான் ஹோண்டா சிபி1000 ஹார்னெட் ஆகும். இந்த பைக்கின் இதய பகுதியாக 999சிசி, இன்லைன் 4-சிலிண்டர் DOHC 16 வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் இந்த EICMA 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபையர் பிளேட் பைக்கிலும் பொருத்தப்பட்டு உள்ளது.

அதிகப்பட்சமாக 147.5 பிஎச்பி மற்றும் 100 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சிபி1000 ஹார்னெட்டில் ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (HSTC), த்ரோட்டல் பை வயர், 3 ப்ரீ-செட் ரைடிங் மோட்கள் மற்றும் அசிஸிட்/ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்டவை முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

honda cb1000 hornet revealed

சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்பி பைக்கை போல் இந்த சிபி1000 ஹார்னெட் பைக்கிலும் 4-2-1 எக்ஸாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய சிபி1000 ஹார்னெட்டில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் சூப்பர்-காம்பெக்ட் ஆனவை. அகலமான வடிவில் இருக்கும் இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் முன்பக்கமாக மடக்கப்பட்ட இறக்கைகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளது.

இரும்பு ட்வின்-ஸ்பார் ஃப்ரேம் மற்றும் குழாய் ட்ரெல்லிஸ்-ஸ்டைல் பின்பக்க சப் ஃப்ரேமில் இந்த பைக்கை ஹோண்டா உருவாக்கி உள்ளது. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் 41மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில், முன்பக்க ஃபோர்க்குகள் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை மற்றும் ரீபாண்ட் டேம்பிங் கொண்டவை.

honda cb1000 hornet revealed

பைக்கை நிறுத்தும் பிரேக் பணியை புதிய சிபி1000 ஹார்னெட் பைக்கில் முன் சக்கரத்தில் 310மிமீ டிஸ்க்குகள் உடன் 4-பிஸ்டன் பிரேக் காலிபர்களும், பின்பக்கத்தில் 256மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்படுகின்றன. இந்த சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் செட்-அப்கள் அனைத்தும் பழைய ஹோண்டா சிபி1000ஆர் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது.

புதிய சிபி1000 ஹார்னெட் பைக்கில் முழு-வண்ண 5-இன்ச் டிஎஃப்டி திரை ஹோண்டாவின் ரோடு சின்க் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள விளக்குகள் யாவும் எல்இடி ஆகும். கிராண்ட் பிரிக்ஸ் சிவப்பு, மேட் இரிடியம் கிரே மெட்டாலிக் மற்றும் பேர்ல் கிளேர் வெள்ளை என 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

honda cb1000 hornet revealed

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஹோண்டா சிபி1000 ஹார்னெட் டிசைன் மற்றும் செயல்படுதிறனில் முழு பேக்கேஜாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். ஆதலால், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இந்த பைக் ஓட்டுவதற்கு எப்படி இருக்கும் என்பது பைக்கை டெஸ்ட் ரைடு செய்து பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும். ஆனால், புதிய சிபி1000 ஹார்னெட் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவே.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 9:39 [IST]
English summary
Eicma 2023 honda cb1000 honet revealed check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X