கவாஸாகி பைக் எல்லாம் ஓரமா தான் நிக்கணும்!! ஹோண்டா தயாரித்து இருக்கும் புதிய 1000சிசி பைக்!

ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்பி (Honda CBR1000RR-R Fireblade SP) மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இத்தாலியில் நடைபெற்றுவரும் EICMA 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள இந்த மோட்டார்சைக்கிளை பற்றிய விபரங்கள் கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன.

உலகின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று ஹோண்டா ஆகும். ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சிபிஆர் பைக்குகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. ஹோண்டா சிபிஆர் பைக்குகள் வரிசையில் புதிய சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்பி மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு உள்ளது.

honda cbr1000rr-r fireblade motorcycle unveiled

புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் மோட்டார்சைக்கிள் நடைபெற்றுவரும் EICMA 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் ஹோண்டா சார்பில் பல்வேறு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒன்று, சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்பி ஆகும்.

ஹோண்டா ரேசிங் கார்பிரேஷன் சார்பில் கொடுக்கப்பட்ட ஐடியாக்களை கொண்டு இந்த புதிய 1000சிசி ரேஸ்-டிராக் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்.பி மோட்டார்சைக்கிள் தோற்றத்திலும், தொழிற்நுட்பங்களிலும் மற்றும் செயல்படுதிறனிலும் பல்வேறு அப்டேட்களை பெற்று வந்துள்ளது.

honda cbr1000rr-r fireblade motorcycle unveiled

இந்த சிபிஆர் பைக்கில் 1000சிசி ஷார்ட்-ஸ்ட்ரோக், இன்லைன் 4-சிலிண்டர் செமி-கேம் கியர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14,000 ஆர்பிஎம்-இல் 214.5 பிஎச்பி மற்றும் 12,000 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பும் கிட்டத்தட்ட இதே அளவிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1000சிசி என்ஜின் தான் இந்த பைக்கில் பொருத்தப்பட்டது.

ஆனால், என்ஜின் சிஸ்டத்தில் அதிக அழுத்த விகிதம் மற்றும் திருத்தப்பட்ட வால்வு டைமிங் உள்ளிட்ட மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், என்ஜின் சிஸ்டத்தில் புதிய ஸ்டேஜ்-3 சமமற்ற பிட்ச் சுருள்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. பைக்கின் எடையை குறைப்பதற்காக கிரான்க்‌ஷாஃப்ட் மற்றும் கான்-ராட்கள் வழங்கப்பட்டுள்ளன.

honda cbr1000rr-r fireblade motorcycle unveiled

ஒவ்வொரு கியருக்கும் இடைப்பட்ட ஆக்ஸலரேஷன் விகிதங்கள் குறுகியதாக கொண்டுவரப்பட்டுள்ளன. என்ஜின் இயங்கும் வேகத்தின் ரெட்லைன் ஆரம்பத்தில் 8,000 ஆர்பிஎம் மட்டுமே. ஆனால், எப்போது கூலண்ட் பயன்பாட்டிற்கு வருகிறதோ அதன்பின் என்ஜினின் வெப்பநிலை குறைந்து என்ஜின் இயங்கும் வேகம் 14,000 ஆர்பிஎம் வரையில் செல்கிறது.

புதிய சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் பைக்கின் எக்ஸாஸ்ட் குழாய்க்கு எடை குறைவான அக்ராபோவிக் மஃப்லர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த பைக்கில் 2-மோட்டார் த்ரோட்டல்-பை-வயர் சிஸ்டத்தை ஹோண்டா அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஆக்ஸலரேஷனின் போதும், என்ஜின் பிரேக்கிங்கின் போது மென்மையான கண்ட்ரோலுக்கு வழி வகுக்கிறது. இவற்றுடன், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் அம்சமும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது.

honda cbr1000rr-r fireblade motorcycle unveiled

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, ஹோண்டாவின் சிபிஆர் பைக்குகள் மற்ற பைக்குகளில் இருந்து விசித்திரமானவை மற்றும் வியப்பானவை. அதிலிலும் புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்பி ஆனது மோட்டார்சைக்கிள் என்பதை தாண்டி, இது ஒரு சிறப்பாக கட்டமைக்கப்பட்ட மூவிங்-மெஷின் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 22:48 [IST]
English summary
Eicma 2023 honda cbr1000rr r fireblade sp motorcycle unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X