பஜாஜை தூக்கி சாப்ட்றும்!! இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தா இந்தியா லெவல்-ஏ மாறிடும்!

லம்ப்ரெட்டா எலெட்ரா (Lambretta Elettra) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் இத்தாலியில் நடைபெற்றுவரும் EICMA 2023 கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கான்செப்ட்டின் அடிப்படையில் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் லம்ப்ரெட்டா இ-ஸ்கூட்டர்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரபலமான இத்தாலிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான லம்ப்ரெட்டாவும் உள்நாட்டில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற EICMA 2023 கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் தனது எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த திட்டங்களை இந்த இவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

lambretta elettra electric scooter concept

லம்ப்ரெட்டாவின் அந்த எதிர்கால திட்டங்களின் ஒரு பகுதியாக வெளிவந்து இருப்பதே எலெட்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் ஆகும். இந்த கான்செப்ட் மாதிரி பார்ப்பதற்கு பஜாஜ் சேத்தக் போன்ற பழமையான கிளாசிக் ஸ்கூட்டர்களை போன்று உள்ளது. ஆனால் அதேநேரம், சில பல மாடர்ன் டச்களும் இந்த ஸ்கூட்டர் கான்செப்ட்டில் உள்ளது.

இந்த கான்செப்ட்டில் உருவாக்கப்படும் ஸ்கூட்டர்களின் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று என்னவென்றால், ஸ்கூட்டரின் பின்பக்க பாடியை முற்றிலுமாக மேலே தூக்கி, மெக்கானிக்கல் பாகங்களை பழுதுப் பார்க்க முடியும். ஸ்டீல் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள எலெட்ரா இ-ஸ்கூட்டர் கான்செப்ட் பழையது மற்றும் புதியது என இரண்டும் கலந்த கலவையாக உள்ளது.

lambretta elettra electric scooter concept

இந்த ஸ்கூட்டர் கான்செப்ட்டில் மாடர்ன் டச்-கள் என்று டிஆர்எல் உடன் அறுகோண வடிவ எல்இடி ஹெட்லேம்ப்பை சொல்லலாம். ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி தட்டையாகவும், நன்கு இடவசதி உடனும் உள்ளது. ஸ்கூட்டரின் பாடியை போன்று இருக்கையின் வடிவமும் நமக்கு பழைய காலத்து ஸ்கூட்டர்களை தான் ஞாபகப்படுத்துகிறது. யுஎஸ்பி சார்ஜிங் துளை முன்பகுதியில் ஓட்டுனருக்கு வலது பக்கத்தில் ஸ்லைடர் உடன் வழங்கப்பட்டு உள்ளது.

ஹேண்டில்பாரின் முனைகள் இரண்டிலும் இண்டிகேட்டர்களை கொண்டுள்ள எலெட்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டில் 12 இன்ச்சில் சக்கரங்கள் உள்ளன. சஸ்பென்ஷனுக்கு ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டிரைல்-லிங்க் சஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் லிங்க்டு மோனோஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கான்செப்ட் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் 11 கிலோ வாட்ஸ் (14.7 பிஎச்பி) இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

lambretta elettra electric scooter concept

EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எலெட்ரா கான்செப்ட் வாகனத்தில் அதிகப்பட்சமாக மணிக்கு 110kmph வேகத்தில் செல்லலாம். இந்த இ-ஸ்கூட்டர் கான்செப்ட்டில் 4.6kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 127கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கிச் செல்லலாம் என்கிறது லம்ப்ரெட்டா.

ஈக்கோ, ரைடு மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான ரைடு மோட்கள் இந்த இ-ஸ்கூட்டரில் கிடைக்கும். இந்த கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 2024இல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் படலாம். கிட்டத்தட்ட இதே நேரத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப்பும் அதன் விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

lambretta elettra electric scooter concept

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லம்ப்ரெட்டாவின் எலெட்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னமும் கான்செப்ட வடிவத்திலேயே உள்ளது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எலெட்ரா கான்செப்ட்டின் அடிப்படையில் தான் எலெட்ரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது. இருப்பினும் இரண்டிற்கும் இடையே சிறிய வித்தியாசங்கள் இருக்கும். இவ்வளவு ஏன், எலெட்ரா பெயர் மாற்றப்பட்டால் கூட ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 7:45 [IST]
English summary
Eicma 2023 italian scooter manufacturer lambretta elettra electric scooter concept
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X