இந்திய மார்க்கெட்டுக்கு ஏத்த கவாஸாகி பைக்குகள்!! 2024இல் விற்பனைக்கு வருது!

கவாஸாகி நிஞ்சா 500 மற்றும் இசட் 500(Kawasaki Ninja 500 & Z500) மோட்டார்சைக்கிள்கள் இத்தாலியில் நடைபெற்று வரும் EICMA 2023 கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த மோட்டார்சைக்கிள்களின் விபரங்களையும் கவாஸாகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாருங்கள், அவற்றை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தாலியின் மிலான் நகரில் 2023ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நிறுவனங்களில் இருந்து மோட்டார்சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. ஹோண்டா அதன் புதிய சிபிஆர்1000 ஆர்.ஆர்-ஆர் ஃபையர் பிளேட் எஸ்பி பைக்கை இந்த கண்காட்சியில் வெளியீடு செய்துள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம்.

kawasaki ninja500 &z500 motorcycles unveiled

அந்த வரிசையில், மற்றுமொரு ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான கவாஸாகி அதன் புதிய மோட்டார்சைக்கிள்களாக நிஞ்சா 500 மற்றும் இசட்500 -ஐ EICMA 2023 கண்காட்சியில் வெளியீடு செய்துள்ளது. இந்த பைக்குகள் இரண்டிலும் ஒரே மாதிரியான என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த மாதிரியான என்ஜின் இது என்ற விபரங்களை வெளியிட கவாஸாகி தற்போதைக்கு மறுத்துவிட்டது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கவாஸாகி எலிமினேட்டர் 500 பைக்கில் பொருத்தப்படுகின்ற 451சிசி, 2-சிலிண்டர் என்ஜின் இந்த புதிய கவாஸாகி நிஞ்சா பைக்குகளில் பொருத்தப்பட்டு இருக்கலாம். இந்த வகையில் பார்க்கும்போது, இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-இல் 45.4 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 42.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

kawasaki ninja500 &z500 motorcycles unveiled

இதன்படி பார்க்கும்போது, கவாஸாகி நிஞ்சா 400 பைக்கை காட்டிலும் இந்த புதிய நிஞ்சா பைக்குகளில் டார்க் திறன் சற்று அதிகமாகவே கிடைக்கும். என்ஜினை புதிய நிஞ்சா 500 மற்றும் இசட் 500 பைக்குகளில் டிரெல்லிஸ் ஃப்ரேம் தாங்கி பிடித்துள்ளது. இந்த பைக்குகளில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த திரை சாதாரணமான திரை தான்.

ஆனால், புதிய நிஞ்சா 500 மற்றும் இசட் 500 பைக்குகளின் விலையுயர்ந்த எஸ்.இ வெர்சன்களில் இந்த திரை ஆனது ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் யுஎஸ்பி-சி டைப் சார்ஜர் வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், டாப் எஸ்.இ வேரியண்ட்களில் கீலெஸ் இக்னிஷனையும் பெறலாம். இவற்றுடன், இந்த பைக்குகளின் டிசைனையும் கவாஸாகி நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

kawasaki ninja500 &z500 motorcycles unveiled

இவை இரண்டில், இசட் 500 ஆனது தோற்றத்தில் சற்று வித்தியாசமானது ஆகும். இந்த பைக்கில் எல்இடி டிஆர்எல்-கள் வித்தியாசமான வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், டேங்க் ஷோல்டர்கள், பெட்ரோல் டேங்க் டிசைன் மற்றும் பைக்கின் பின் இறுதிமுனை உள்ளிட்டவையும் புதிய இசட் 500 பைக்கில் புதுமையானதாக கொடுக்கப்பட்டுள்ளன.

மறுப்பக்கம், புதிய நிஞ்சா 500 பைக் ஆனது கவாஸாகியின் வழக்கமான நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் பைக்கை போன்று வழக்கமான, கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கே உண்டான தோற்றத்தில் உள்ளது. புதிய கவாஸாகி நிஞ்சா 500 மற்றும் இசட் 500 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், அடுத்த 2024ஆம் வருடத்தில் இவை இரண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

kawasaki ninja500 &z500 motorcycles unveiled

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா, பிஎம்டபிள்யூ போன்ற மற்ற பைக் நிறுவனங்களும் இவ்வாறான பைக்குகளை உருவாக்கினாலும், கவாஸாகி பைக் என்றாலே அது தனிரகம் ஆகும். இதனால்தான், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கவாஸாகி பைக்குகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் நிஞ்சா 500 பைக் 2024இல் அறிமுகம் செய்யப்பட்டால், தற்போது இருக்கும் நிஞ்சா 400 பைக்கின் விற்பனை நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 23:36 [IST]
English summary
Eicma 2023 kawasaki ninja 500 and z500 motorcycles unveiled
மேலும்... #கவாஸாகி #kawasaki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X