ஜப்பானில் சுஸுகி பார்த்து, பார்த்து உருவாக்கிய பைக்!! இந்தியாவுல விற்பனைக்கு வந்தா சேல்ஸ் பிச்சிக்கும்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இத்தாலியில் நடைபெறும் EICMA 2023 கண்காட்சியில் அதன் புதிய ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000ஜி.எக்ஸ் மோட்டார்சைக்கிளை வெளியீடு செய்துள்ளது. சுஸுகியின் மற்றுமொரு ஹைப்பர் டூரர் பைக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெற்றுவரும் 2023 EICMA கண்காட்சியில் சுஸுகி நிறுவனம் சார்பில் சில மோட்டார்சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஜி.எஸ்.எக்ஸ்-8ஆர் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கும் உள்ளது. அதேபோல், ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000ஜி.எக்ஸ் என்ற பெயரில் ஹைப்பர் டூரர் பைக்கையும் சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது.

eicma 2023 - suzuki unveiled gsx-s1000gx

பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்.ஆர் மற்றும் கவாஸாகி வெர்ஸஸ் 1000 பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற புதிய சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000ஜி.எக்ஸ் பைக் சுஸுகியின் ஜி.எஸ்.எக்ஸ்-1000ஜிடி பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.எக்ஸ்-1000ஜிடி பைக் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால், அந்த பைக்கில் பொருத்தப்பட்ட அதே 999சிசி 4-சிலிண்டர் என்ஜின் தான் புதிய ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000ஜிஎக்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. 999சிசி, லிக்யுடு-கூல்டு, DOHC, 4-சிலிண்டர் என்ஜினான இது அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-இல் 150 பிஎச்பி மற்றும் 9,250 ஆர்பிஎம்-இல் 106 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

eicma 2023 - suzuki unveiled gsx-s1000gx

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் செயின் டிரைவ் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன. இந்த என்ஜின் சிஸ்டத்தில் போர் 73.4மிமீ அளவிலும், ஸ்ட்ரோக் 59மிமீ அளவிலும் வழங்கப்படுகிறது. மேலும், புதிய ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000ஜி.எக்ஸ் பைக்கில் செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் அலுமினியம் ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளன.

சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பின்பக்க மோனோஷாக்கை ஆட்டோமேட்டிக்காக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதற்காக 150மிமீ-இல் வீல் டிராவல் வழங்கப்பட்டு உள்ளது. பைக்கை நிறுத்துவதற்கான பிரேக் சிஸ்டங்களாக 310மிமீ-இல் டபுள் டிஸ்க் முன் சக்கரத்திலும், சிங்கிள் டிஸ்க் பின் சக்கரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

eicma 2023 - suzuki unveiled gsx-s1000gx

இந்த பைக்கில் 17-இன்ச் 6-ஸ்போக் காஸ்ட் அலுமினியம் ரிம்களை கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் டன்லப் ஸ்போர்ட்ஸ்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தொலைத்தூர பயணத்திற்கான புதிய சுஸுகி பைக்கில் 19 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் தரையில் இருந்து ரைடர் அமரும் இருக்கை ஆனது 845மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதியானது 155மிமீ உயரத்தில் உள்ளது. இந்த பைக்கில் 4-2-1 எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை சுஸுகி வழங்கியுள்ளது. இந்த பைக்கின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் 6.5 இன்ச்சில் டிஎஃப்டி டிஸ்பிளே ப்ளுடூத் வசதி உடன் உள்ளது. அத்துடன் இந்த பைக்கில் யுஎஸ்பி சார்ஜர் வசதியும் உள்ளது.

eicma 2023 - suzuki unveiled gsx-s1000gx

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனைத்து அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்களையும் கொண்ட பக்கா மாடர்ன் சுஸுகி மோட்டார்சைக்கிளாக புதிய ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000ஜி.எக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த சுஸுகி மோட்டார்சைக்கிளை நெடுஞ்சாலைகளில் இயங்குவது மட்டுமில்லாமல், ரேஸ்-டிராக்குகளிலும் தாராளமாக இயக்கலாம். இதுக்கு ஏற்றவாறே சஸ்பென்ஷன் செட்-அப்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 7:45 [IST]
English summary
Eicma 2023 suzuki unveiled gsx s1000gx check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X