இந்திய கம்பெனியின் எலக்ட்ரிக் பைக்கை பார்த்து வாயடைத்து போன ஐரோப்பியர்கள்!! ஓசூரில் உருவான பைக் இது!!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) நிறுவனம் அதன் சர்வதேச சந்தைக்கான எஃப்77 மோட்டார்சைக்கிளை EICMA 2023 கண்காட்சியில் வெளியீடு செய்துள்ளது. மேலும், எஃப்99 ஃபேக்ட்ரி ரேசிங் பிளாட்ஃபாரம் க்ளோபல் பிரீமியர் செய்யப்பட்டு உள்ளது. இவை இரண்டை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

அல்ட்ராவொய்லெட், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். மற்ற இந்திய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை போன்று, அல்ட்ராவொய்லெட்டும் தனது எதிர்கால தயாரிப்புகளை EICMA 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. இதில் முக்கியமாக, எஃப்77 எலக்ட்ரிக் பைக்கின் ஐரோப்பிய வெர்சன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

ultraviolette f77 international spec unveiled

ஐரோப்பாவில் விற்பனையை துவங்கவுள்ள அல்ட்ராவொய்லெட் எஃப்77 பைக்கின் டெலிவிரிகள் அங்கு அடுத்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிங்-எட்ஜ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான இதனை ஷேடோவ், லேசர் மற்றும் ஏர்ஸ்ட்ரைக் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் ஐரோப்பாவில் விற்பனை செய்ய அல்ட்ராவொய்லெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கில் 10.3kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 100 என்எம் மற்றும் 30 கிலோவாட்ஸ் (40 பிஎச்பி) இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு எஃப்77 எலக்ட்ரிக் பைக்கும் சூப்பரான டிசைன் மற்றும் த்ரில்லிங்கான செயல்படுதிறனை வழங்குவதற்கு ஏற்ப பல்வேறு கட்ட சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் பின்னர் வடிவமைக்கப்படுகின்றன.

ultraviolette f77 international spec unveiled

க்ளைட், காம்பட் மற்றும் பாலிஸ்டிக் என்ற 3 விதமான ரைடிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் பைக்கில் கிடைக்கும். ஐரோப்பாவில், அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 9,000 யூரோக்களில் இருந்து 11,000 யூரோக்கள் வரையில் நிர்ணயிக்கப்படலாம். ஆனால், இறுதி விலைகள் அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் வரிகளுக்கு பிறகே முடிவு செய்யப்படும்.

ஐரோப்பாவில், எஃப்77 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் ஏற்க துவங்கும் என கூறப்படுகிறது. எஃப்77 எலக்ட்ரிக் பைக்கிற்கு அடுத்து, தனது எஃப்99 ஃபேக்ட்ரி ரேசிங் பிளாட்ஃபாரம் மூலமாக சர்வதேச சந்தைகளில் பல்வேறு தயாரிப்புகளை களமிறக்க அல்ட்ராவொய்லெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ultraviolette f77 international spec unveiled

இந்த எஃப்99 ஃபேக்ட்ரி ரேசிங் பிளாட்ஃபாரத்தையும் EICMA 2023 கண்காட்சியில் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது. கண்காட்சியில், இந்த பிளாட்ஃபாரம் குறித்த விபரங்களை பார்வையாளர்கள் பலர் ஆர்வத்துடன் கேட்டறிந்து செல்கின்றனர். எஃப்99 பிளாட்ஃபாரத்தின் முக்கிய சிறப்பம்சமே, அதன் சூப்பர்சோனிக் ஃபைட்டர் ஜெட் போன்றதான ஏரோடைனாமிக் தோற்றம் ஆகும்.

இதற்காகவே, இந்த பிளாட்ஃபாரத்தின் கான்செப்ட்டில் முன்பக்கத்தில் இரு துளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த கான்செப்ட்டில் நிறைய கூடுதலான விங்லெட்ஸ் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், இந்த கான்செப்ட்டில் உருவாக்கப்படும் மோட்டார்சைக்கிள்களில் அதிகப்பட்சமாக மணிக்கு 265kmph வேகம் வரையில் செல்ல முடியும். எஃப்99 பிளாட்ஃபாரத்தில் நிறைய பாகங்கள் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டவைகளாக உள்ளன.

ultraviolette f77 international spec unveiled

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் இந்தியாவை காட்டிலும், ஐரோப்பிய நாடுகளுக்கே சரியானதாக இருக்கும். ஏனெனில், இந்த நிறுவனம் உருவாக்கும் எஃப்77 ஆனது ஓர் சூப்பர் எலக்ட்ரிக் பைக் ஆகும். இதனாலேயே இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், எஃப்77 பைக்கின் விலை ஐரோப்பிய மக்களுக்கு ஏற்றதாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 23:51 [IST]
English summary
Eicma 2023 ultraviolette f77 international spec unveiled check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X