ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க போல!! சேல்ஸ் சும்மா தாறுமாறா உயருது!
கடந்த ஏப்ரலில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்த முதல் 10 முன்னணி நிறுவனங்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மற்ற நாடுகளை போல நம் நாட்டிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சாலைகளில் இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு கடந்த சில வருடங்களில் பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் இந்திய சந்தையில் களம் புகுந்துள்ளன.

அவற்றுள் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் கொடிக்கட்டி பறந்துள்ள முதல் 10 நிறுவனங்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். இந்த வரிசையில் வழக்கம்போல் முதல் இடத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பிடித்துள்ளது. எங்கும் ஓலா மயம் என்பதுபோல், சாலையில் எங்கு திரும்பினால் அங்கு ஓர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருப்பது போல் தான் தோன்றுகிறது. கடந்த ஏப்ரலில் மொத்தம் 21,881 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இதற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் 8,726 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அப்படியெனில், இரண்டிற்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசங்கள் உள்ளன என்பதை பாருங்கள். இதற்கு முக்கிய காரணம், சமீப காலத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது உருவாகியுள்ள கிரேஸ் ஆகும். ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதன்முறையாக கடந்த 2021 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் டெலிவிரிகள் 2022இன் துவக்கத்தில் தான் துவங்கப்பட்டன.

கடந்த 2022 ஏப்ரலில் 12,708 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் மோட்டார் 8,726 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக கூறினோம் அல்லவா... ஆனால் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 1,498 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்தது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து தற்போதைக்கு ஐக்யூப் என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனையில் உள்ளது.
3வது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் 8,318 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை உடன் உள்ளது. ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது கடந்த சில வருடங்களாகவே நல்லப்படியாகவே உள்ளது. 2022 ஏப்ரலில் கூட 6,540 எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களை ஆம்பியர் விற்பனை செய்திருந்தது. ஆனால் இதனை மேலும் அதிகரிக்கும் முயற்சிகளில் ஆம்பியர் நிறுவனம் ஈடுப்பட்டாலும், அதற்கு பலன் கிடைப்பது போல் தெரியவில்லை.

செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்யும் ஏத்தர் எனர்ஜி இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. ஏத்தர் எனர்ஜியின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை 7,746 ஆகும். இதற்கடுத்து 5வது இடத்தை பஜாஜ் ஆட்டோ 4,013 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை உடன் தன்வசமாக்கி உள்ளது. 6வது மற்றும் 7வது இடங்களில் ஹீரோ எலக்ட்ரிக் (3,331) மற்றும் ஒகினவா (3,216) நிறுவனங்கள் உள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2022 ஏப்ரலை விட பாதிக்கு மேல் குறைந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆம்பியர், ஹீரோ எலக்ட்ரிக், ஒகினவா போன்றவை பல ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருபவை. ஆனால் அவற்றை மிக எளிதாக சந்தையில் சமீபத்தில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி போன்றவை முந்தியுள்ளன. டிவிஎஸ், பஜாஜ் போன்ற ஆட்டோமொபைலில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களின் கைகளும் மாதத்திற்கு மாதம் பலமாக ஓங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications









