200கிமீ போக முடியுமா!! ஓலாவுக்கு இப்பவே அல்லு விட்டிருக்குமே! விலையும் கம்மிதான்.. உங்களுக்கு ஓகேவா இருக்கும்!
இந்தியாவில் மின் வாகனங்களை விற்பனை செய்வதற்கு என்றே பிரத்யேகமாக ஷோரூம்களை அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் எலெக்ட்ரிக் ஒன் (Electric One). பன்முக பிராண்டுகளின் எலெக்ட்ரிக் இருசக்கர (Multi Brand EV Store) வாகனங்களை விற்பனைச் செய்யும் ஓர் பிராண்டே இந்த எலெக்ட்ரிக் ஒன் ஆகும்.
ஒகினவா, இ-ஸ்பிரின்டோ, மோட்டோவோல்ட், ஒன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்ஸ், ஹீரோ லெக்ட்ரோ இ-சைக்கிள்ஸ், காஸ்பைக், பேட் ஆர்இ, லெக்ட்ரிக்ஸ், மயூரி, இவ்ட்ரிக், எலெக்ட்ரிக் பே, பிஎம்ஆர் மற்றும் ரன்ஆர் உள்ளிட்ட பிராண்டுகளின் மின்சார இருசக்கர வாகனங்களை எலெக்ட்ரிக் ஒன் ஷோரூமில் வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த நிறுவனமே தற்போது தன்னுடைய சொந்த பிராண்டின்கீழ் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இ1 (e1) எனும் பிராண்டின்கீழே தனது புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இ1 ஆஸ்ட்ரோ ப்ரோ (E1 Astro Pro) மற்றும் இ1 ஆஸ்ட்ரோ ப்ரோ 10 (E1 Astro Pro 10) ஆகியவையே அவை ஆகும்.
இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே எலெக்ட்ரிக் ஒன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. முதல் ஒன்றிற்கு ரூ. 99,999 விலையும், இரண்டாவது ஒன்றிற்கு ரூ. 1.2 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குமான புக்கிங் பணிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் தொடங்கி இருக்கின்றது. இதுதவிர, நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம் வாயிலாகவும் இந்த இரு வாகனங்களுக்கான புக்கிங்குகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் மிகப் பெரிய தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக எலெக்ட்ரிக் ஒன் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
குறிப்பாக இந்தியர்களின் மிகப் பெரிய சிறப்பம்சங்கள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும் இந்த வாகனத்தை எலெக்ட்ரிக் ஒன் தயார் செய்து இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நிறுவனம் 2400 வாட் மின்சார மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது. அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும்.
அதனால் வெறும் 2.99 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியுமாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும். இதில் பேட்டரி பேக்கை பொருத்தவரை கார்பன் கோட்டிங் பூசப்பட்ட 72 V லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 200 கிமீ வரை ரேஞ்ஜ் பெற்றுக் கொள்ள முடியும் எலெக்ட்ரிக் ஒன் தெரிவித்து இருக்கின்றது. இது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 ப்ரோவிற்கே டஃப் கொடுக்கும் ரேஞ்ஜ் திறன் ஆகும். சிறப்பம்சங்கள் விஷயத்திலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், ரிமோட் லாக், அன்லாக் சிஸ்டம், திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக்குகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய வானமாக எலெக்ட்ரிக் ஒன் பிராண்டின் புதிய மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் ஒன், அதன் புதிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இதற்கு எப்படி வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








