டிவிஎஸ், பஜாஜ்-க்கே விற்பனையில் தண்ணி காட்டும் ஓலா!! அசூர வளர்ச்சியை நோக்கி ஒவ்வொரு மாதமும்...

இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மானியத்தை இந்த ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

2021இல் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த போது, எதிர்காலத்தில் ஓலா தான் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் என பலரால் கணிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய நிலையை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சற்று விரைவாகவே அடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

electric two-wheeler brands

பெங்களூரை மைய இடமாகவும், ஓசூரில் தொழிற்சாலையை அமைத்தும் செயல்பட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த மே மாதத்தில் மொத்தம் 28,469 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அதுவே 2022 மே மாதத்தில் ஓலா நிறுவனத்தில் இருந்து வெறும் 9,269 எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் கடந்த 2023 ஏப்ரல் மாதத்திலும் 21,882 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா விற்பனை செய்திருந்தது.

இதில் இருந்து ஒவ்வொரு மாதத்திலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை அறியலாம். ஓலா பிராண்டில் இருந்து தற்சமயம் எஸ்1 ஏர், எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. எலக்ட்ரிக் பைக் எதுவும் இல்லை. எலக்ட்ரிக் 2-வீலர்கள் உள்பட மொத்த 2-வீலர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் முதலிடம் வகிக்க, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 8வது இடத்தை பிடித்துள்ளது.

electric two-wheeler brands

எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் ஓலா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், இதற்கடுத்து 2வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்ளது. பராம்பரியமான இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரில் இருந்து தற்போதைக்கு ஐக்யூப் என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த மே மாதத்தில் மொத்தம் 20,261 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் 2022 மே மாதத்தில் வெறும் 478 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவற்றிற்கு அடுத்து, ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 3வது இடத்தை தனதாக்கியுள்ளது. செயல்திறன்மிக்க '450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்கும் ஏத்தர் எனர்ஜி 15,266 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த மே மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

electric two-wheeler brands

4வது இடத்தில் மற்றுமொரு முன்னணி 2-வீலர் பிராண்டான பஜாஜ் ஆட்டோ 10,028 எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை உடன் உள்ளது. பஜாஜில் இருந்தும் தற்போதைக்கு சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 5வது இடத்தில் ஆம்பியர் நிறுவனம் 9,618 யூனிட்களின் விற்பனை உடன் இருக்க, கடைசி 5 இடங்களில் முறையே ஒகயா, ஒகினவா, ஹீரோ எலக்ட்ரிக், பிகாஸ் ஆட்டோ மற்றும் பேட்டரி எலக்ட்ரிக் நிறுவனங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த டாப்-10 நிறுவனங்களில் ஒகினவா மற்றும் ஹீரோ எலக்ட்ரிக்கை தவிர்த்து மற்றவை அனைத்தின் விற்பனையும் கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும் கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் மத்திய அரசு மானியம் குறைந்த காரணத்தினால் எலக்ட்ரிக் 2-வீலர்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், இந்த ஜூன் மாத விற்பனையில் மேற்கூறப்பட்ட பல்வேறு நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 11:09 [IST]
English summary
Electric two wheeler brands which top in 2023 may sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X