Elesco V1 V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை இவ்ளோதானா! செல்போன் வாங்கற காசுல இதை வாங்கீரலாம்!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தொடர்ச்சியாக கால் தடம் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், எலெஸ்கோ (Elesco) நிறுவனமும் ஒன்றாகும்.

எலெஸ்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அவற்றுக்கு வி1 (V1) மற்றும் வி2 (V2) என பெயரிடப்பட்டுள்ளது. எலெஸ்கோ வி1 மற்றும் எலெஸ்கோ வி2 ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 2.3 kWh பேட்டரிதான் பொருத்தப்பட்டுள்ளது.

Elesco V1 Electric Scooter

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பயணங்களுக்கும் ஏற்ற வகையில், இதன் ரேஞ்ச் (Range) உள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு 6-7 மணி நேரம் ஆகும்.

மாலை, இரவு நேரங்களில் சார்ஜ் போட்டு விட்டால், காலை வழக்கமான பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள ஏதுவான வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 200 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டுள்ளன. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன. இதில், ப்ளுடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், சைடு ஸ்டாண்டு சென்சார், எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கீலெஸ் இக்னீஷன் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேற்கண்ட வசதிகள் அனைத்தும் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலுமே வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை (Price) வெறும் 69,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இவை மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளாக கருதப்படுகின்றன.

இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும், ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) செல்போனை விட குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆப்பிள் ஐபோன் 14 செல்போன் விலை 79,900 ரூபாய் ஆக உள்ளது (ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை).

மிகவும் குறைவான விலையில், பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் உடன் களமிறக்கப்பட்டுள்ளதால், எலெஸ்கோ வி1 மற்றும் எலெஸ்கோ வி2 ஆகிய 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எலெஸ்கோ நிறுவனம் நம்புகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல் விலை (Petrol Price) உயர்வு பிரச்னை காரணமாக, வாடிக்கையாளர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனவே வரும் காலங்களில் சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தை நாம் காண போகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 15, 2023, 20:58 [IST]
English summary
Elesco v1 v2 electric scooters launch price range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+