பார்க்கதான் சைக்கிள் மாதிரியிருக்கும் ஆனா இந்த இ-பைக்குல சென்னையில இருந்து தடா வரை நிக்காம போயிட்டு வரலாம்!

இங்க்வீ எல் 20 இ-பைக் முழு சார்ஜில் 140 கி.மீ வரை இயங்கும் திறன் கொண்டது. இதில் சென்னையில் எடுத்தால் தடாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வந்துவிடலாம். பெண்களைக் குறித்துத் தயாரிக்கப்பட்ட இந்த இ-பைக் குறித்துக் காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இல்லாதது, குறைவான பயண செலவு, சத்தமே இல்லாமல் பயணிக்கும் வாகனம், பராமரிப்பு குறைவு, இப்படிப் பல அம்சங்கள் இருப்பதால் இந்த ரக வாகனங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

engwe l20 e-bike

இந்நிலையில் இங்க்வீ என்ற நிறுவனம் தற்போது அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் சில நாடுகளிலும் தனது எல்20 என்ற புதிய இ-பக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பார்க்கச் சைக்கிள் போல இருந்தாலும் ஒரு ஒரு எலெக்ரிக் மொபட் ரக வாகனமாகும். முழுவதும் பேட்டரி பவரில் இயங்கும். திறன் கொண்டது. இது பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இதில் ஏறி அமர்வதற்கும் ஓட்டி செல்வதற்கும் எளிமையாக இருக்கும். பெண்களால் இதைச் சுலபமாகக் கையாள முடியும். இதன் சீட்களும் பெண்களுக்கு ஏற்றவாறு பெரியதாகவும் சொகுசாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ-பைக் மொத்தம் 4 வித கலர் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலர்களும் பெண்களுக்குப் பிடித்த கலரில் வழங்கப்பட்டுள்ளது. ஃபிளாங்மிங்கோ பிங்க், அவக்கேடோ கிரீன், ஸ்னோ ஒயிட், ஆக்ஸி பிளாக், ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

engwe l20 e-bike

இந்த இ-பைக்கின் முன்பக்கமும் பின்பக்கமும் ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது பைக்கில் பொருட்களை எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும். இந்த பைக்கில் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-பைக் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் தனித்தனி வெர்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அமெரிக்க வெர்ஷனில் 750 வாட்ஸ் பிரஷ்லெஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 960 வாட்ஸ் பவரை வெளிப்படுத்தும். இதனால் இந்த இ-பைக் அதிகபட்சமாக 40 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். இதுவே ஐரோப்பிய வெர்ஷனில் 250 வாட்ஸ் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 50 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் மூலம் 25 கி.மீ வேகம் வரை இந்த இ-பைக்கால் பயணிக்க முடியும்.

engwe l20 e-bike

இந்த இரண்டு வெர்ஷனிலம் 48வோல்ட் 13 அம்பியயர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த இ-பைக்கை சிங்கிள் சார்ஜில் 140 கி.மீ வரை கூட்டி செல்லும், இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 6.5 மணி நேரம் வரை ஆகும். இந்த மோட்டார் 7 ஸ்பீடு ஸிமானோ கியர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இ-பைக்கின் முன்பக்கமும் பின்பக்கமும் 160மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பக்கம் மற்றும்டவழங்கப்பட்டுள்ளது. 20X4 ஃபேட் டயர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரைடு சொகுசாக இருக்கும். இந்த எல்20 இ-பைக்கில் அலுமினியம் அலாய் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 கிலோ வரையிலான எடையைத் தாங்கும் திறன் கொண்டது. சுமார் 5 அடி முதல் 6.8 அடி உயரம் கொண்டவர்கள்வரை இதைச் சுலபமாக ஓட்டலாம்.

இந்த எல்20 இ-பைக்கின் விலையைப் பொருத்தவரை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 1200 அமெரிக்க டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ98 ஆயிரம், ஆனால் இந்த இ-பைக்கை ஆரம்பத்திலேயே புக் செய்பவர்களுக்கு 150 அமெரிக்க டாலர் அதாவது ரூ12,300 தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பைக் இந்தியாவில் விற்பனைக்கு இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்க்வீ எல்20 இ-பைக் போன்ற தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரு நகரங்களில் நிச்சியம் டிமாண்ட் இருக்கிறது. ஒரளவு வேகமும், தரமான தயாரிப்பாகவும் இருந்தால் போதும். இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பார்கள் இப்படியான தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

More from DriveSpark

Article Published On: Thursday, May 11, 2023, 16:32 [IST]
English summary
Engwe l20 new e bike launched price range battery all other details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X